ICC Women’s World Cup 2025: மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்த விலை டிக்கெட்.. ரசிகர்களை கவர ஐசிசி புதிய திட்டம்!
Women's Cricket World Cup Tickets: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025 செப்டம்பர் 4ம் தேதி 2025 மகளிர் உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இந்த போட்டி, கவுகாத்தியில் தொடங்குகிறது. ரூ.100-க்கு டிக்கெட் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 செப்டம்பர் 4ம் தேதியான இன்று 2025 மகளிர் உலகக் கோப்பைக்கான (ICC Women’s World Cup 2025) டிக்கெட் விற்பனையை அறிவித்தது. இந்த உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதியுடன் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெறுகிறது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Barsapara Cricket Stadium) இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடக்க போட்டியுடன் தொடங்குகிறது. இந்தநிலையில், அனைத்து லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
குறைந்த விலையில் டிக்கெட்:
🚨 Women’s World Cup 2025 Phase 1 tickets are now live! 🏏
Record-low prices start at just ₹100 in India! 🤩 #CricketTwitter pic.twitter.com/hkwQ08vogz
— Female Cricket (@imfemalecricket) September 4, 2025
ஐசிசியின் எந்தவொரு உலகக் கோப்பை போட்டி நிகழ்விற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த விலையில் டிக்கெட்டை அறிவித்துள்ளது. அதன்படி, வெறும் ரூ. 100க்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், ரசிகர்களுக்கு ஏற்ற விலை நிர்ணயம், அரங்கங்கள் நிரம்பியிருப்பதையும், உற்சாகமான கூட்டத்தையும் உறுதி செய்வதை ஐசிசி நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்வை இன்னும் பிரமாண்டமாக நடத்த பிரபல இந்திய பாடகி ஷ்ரேயா கோஷல், கவுகாத்தியில் நடைபெறும் தொடக்க விழாவில் நிகழ்ச்சி நடத்துகிறார்.




ALSO READ: பண மழையில் நனையப்போகும் மகளிர் அணி.. 2025 மகளிர் உலகக் கோப்பை பரிசுத்தொகை அதிகரிப்பு!
2025ம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இலங்கையில் கொழும்பிலும், இந்தியாவில் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நவி மும்பை ஆகிய 4 இந்திய நகரங்களில் நடைபெற உள்ளது. முன்னதாக, நவி மும்பைக்கு பதிலாக பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை மகளிர் போட்டிகள் நடைபெற இருந்தது.
ALSO READ: கோடியில் கொட்டப்போக்கும் பணம்.. ஆசியக் கோப்பை வெற்றியாளருக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?
2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ரஜோத் கவுட், க்ரந்தி கௌத், சினே ராணா, உமா செத்ரி (விக்கெட் கீப்பர்)
ரிசர்வ் வீரர்கள்:
தேஜல் ஹசாப்னிஸ், பிரேமா ராவத், பிரியா மிஸ்ரா, மின்னு மணி, சயாலி சத்கரே