Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Women’s ODI World Cup 2025: ஷெபாலி வெர்மா நீக்கம்..! தலைமை தாங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்.. 2025 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

India's Women's Cricket World Cup 2025 Squad Announced: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 2025 உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாகவும் உள்ளனர். ஷெஃபாலி வெர்மா அணியில் இடம் பெறவில்லை. இந்தியா-இலங்கை கூட்டாக நடத்தும் போட்டிகள் 2025 செப்டம்பர் 30ம் தேதி தொடங்குகிறது.

Women’s ODI World Cup 2025: ஷெபாலி வெர்மா நீக்கம்..! தலைமை தாங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்.. 2025 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Aug 2025 17:00 PM

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான (Women’s Cricket World Cup 2025) இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ளது. 8 அணிகள் கொண்ட மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையானது வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ளது. நீது டேவிட் தலைமையிலான மகளிர் தேர்வுக் குழு மகளிர் உலகக் கோப்பைக்கான 15 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் அணியை தேர்ந்தெடுத்துள்ளது. தேர்வுக்குப் பிறகு, நீது டேவிட் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அணியை அறிவித்தார். அதன்படி, 2025  மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஃபாலி வெர்மாவுக்கு இடம் இல்லை:

25222
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா நீண்ட காலமாக இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற நட்சத்திர வீராங்கனைகளும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இருப்பினும், அதிரடி தொடக்க வீராங்கனையான ஷெபாலி வெர்மா இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சர்வதேச இந்திய மகளிர் அணியின் ஷெபாலி வெர்மாவின் செயல்திறன் சிறப்பானதாக இல்லை. எனவே, அவர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். சர்வதேச அணியில் இடம் பிடிக்காவிட்டாலும் தற்போது இந்திய ஏ அணியுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஷெபாலி வெர்மா உள்ளார்.

இந்திய மகளிர் அணி போட்டி அட்டவணை:

2025ம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி இலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும். அதன் பிறகு, பாகிஸ்தான் அணியை வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதி எதிர்கொள்கிறது.  அதே நேரத்தில், இந்திய அணி வருகின்ற 2025 அக்டோபர் 9ம் தேதி தென்னாப்பிரிக்காவையும், வருகின்ற 2025 அக்டோபர் 12ம் தேதி ஆஸ்திரேலியாவையும், வருகின்ற 2025 அக்டோபர் 19 ஆம் தேதி இங்கிலாந்தையும், வருகின்ற 2025 அக்டோபர் 23 ஆம் தேதி நியூசிலாந்தையும், வருகின்ற 2025 அக்டோபர் 26 ஆம் தேதி வங்கதேசத்தையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி ஹைபிரிட் மாடல் இந்தியா மற்றும் இலங்கை நடைபெறுகிறது. பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் கொழும்பில் உள்ள ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் போட்டிகள் பெங்களூரு, இந்தூர், குவஹாத்தி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.

2025 மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, சினே ராணா.