Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli’s Future: ஓய்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி! தீவிர பயிற்சியில் விராட் கோலி.. ரசிகருடன் பகிர்ந்த புகைப்படம்!

Virat Kohli ODI Retirement Speculation: விராட் கோலியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. 36 வயதான கோலி, 2027 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய தொடருக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Virat Kohli’s Future: ஓய்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி! தீவிர பயிற்சியில் விராட் கோலி.. ரசிகருடன் பகிர்ந்த புகைப்படம்!
ரசிகருடன் விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Aug 2025 11:06 AM

இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் விராட் கோலியின் (Virat Kohli) எதிர்காலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 36 வயதான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் முழுக்க முழுக்க இளம் அணிக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது கோலிக்கு சாதகமாக பாதகமாக என்பது இதுவரை தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடரை கருத்தில்கொண்டு விராட் கோலி, 2 மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சியை தொடங்கி விட்டார்.

ALSO READ: பிசிசிஐ அரசியல் காரணமாக கோலி, ரோஹித் ஓய்வா..? முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் விராட் கோலி:


3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி விராட் கோலி மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் கோலி சமீபத்தில் பயிற்சியின்போது லண்டனில் ரசிகர் ஒருவருடன் பயிற்சிக்கு பிறகு செல்ஃபி எடுத்தார் அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வைரலான அந்த புகைப்படத்தில் விராட் கோலி பயிற்சி வலைக்குள் பயிற்சி உடையில் இருப்பதை காணலாம். இதன்மூலம், ஆஸ்திரேலிய தொடருக்கு ஏற்கனவே மீண்டும் களமிறங்குவதை குறிக்கிறது. வைரலான இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர், “2027 உலகக் கோப்பை ஆரம்பமாகிவிட்டது. எனது தலைவன் களத்தில் இருக்கிறார், பயிற்சியும் செய்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி இந்திய அணி பயிற்சியாளரா? வைரலாகும் தகவல்!

17 ஆண்டுகள் நிறைவு:


சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி சரியாக 17 ஆண்டுகள் கடந்து விட்டது. விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்க முடிந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னும் எளிதில் முறியடிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில், 14,000 ரன்களைக் கடந்த கோலி, டெண்டுல்கரின் சாதனையை விட 4,000 ரன்களுக்கு சற்று குறைவாகவே உள்ளார். இருப்பினும், சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி கணிசமாக சிறந்த சராசரியைக் கொண்டுள்ளார்.