Women’s Cricket World Cup 2025: பண மழையில் நனையப்போகும் மகளிர் அணி.. 2025 மகளிர் உலகக் கோப்பை பரிசுத்தொகை அதிகரிப்பு!
ICC Women's World Cup Prize Money: 2025 செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி (44.8 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகை வழங்கப்படும். இது கடந்த போட்டியின் பரிசுத்தொகையை விட 4 மடங்கு அதிகம்.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (Women’s Cricket World Cup 2025) வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்தியாவின் நான்கு நகரங்களிலும், இலங்கையின் ஒரு நகரத்திலும் நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் அணி (Pakistan Womens Cricket Team) ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் விளையாடாது என்பதால், பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறுகிறது. இந்தநிலையில், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை பற்றிய அறிவிப்பை ஐசிசி (ICC) வெளியிட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்துகிறது. இதற்கிடையில், ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை 2025க்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது, இது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு சுமார் ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.




ALSO READ: மகளிர் உலகக் கோப்பை அட்டவணை மாற்றம்.. புறக்கணிக்கப்பட்ட பெங்களூரு.. ஐசிசி அதிரடி!
பரிசுத்தொகை எவ்வளவு..?
🚨 ICC has announced that the winner of the ICC Women’s Cricket World Cup 2025 will receive .48 million, a 239% increase compared to 2022. The runner-up will take home .24 million, a 273% increase from last time.
Semi-finalists: .12M
5th & 6th place: 0K pic.twitter.com/rcnr93wtF9— Cricket Business HQ (@cric_businessHQ) September 1, 2025
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 44.80 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ. 39.55 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும். இது இந்தப் போட்டியில் இதுவரை வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட மிகப்பெரிய பரிசுத் தொகையாகும். அதேநேரத்தில், இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 13.88 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 122.5 கோடி) எனவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “ஐ.சி.சி பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சாதனை பரிசுத் தொகையாக 44.8 லட்சம் டாலர்கள் கிடைக்கும். ” ஆகும்.
மேலும், “மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு இப்போது 2.24 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 19.77 கோடி), அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு 1.12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9.89 கோடி) வழங்கப்படும். குழு நிலையில் (லீக் நிலை) வெற்றி பெறும் அணிகளுக்கு 34,314 டாலர் (சுமார் ரூ. 30.29 லட்சம்) வழங்கப்படும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 7 லட்சம் டாலர் (சுமார் ரூ. 62 லட்சம்) மற்றும் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 280,000 டாலர் (சுமார் ரூ. 24.71 லட்சம்) வழங்கப்படும். பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் 250,000 டாலர் (சுமார் ரூ. 22 லட்சம்) வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி உலகக் கோப்பையில் எவ்வளவு பரிசுத்தொகை..?
கடந்த 2022ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற கடைசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.31 கோடி மட்டுமே, எனவே இப்போது இந்தத் தொகை சுமார் 297 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!
உலகெங்கிலும் பெண்கள் கிரிக்கெட்டின் பிரபலத்தை அதிகரிப்பதும், அதை ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையாகக் கொண்டுவருவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.