Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Commonwealth Games: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!

India Bids for 2030 Commonwealth Games: மத்திய அமைச்சரவை, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை சமர்ப்பிக்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத் ஹோஸ்ட் நகரமாக முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகள் இந்தியாவின் தேசிய பெருமையையும், சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தும்.

Commonwealth Games: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!
காமன்வெல்த் போட்டிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Aug 2025 21:34 PM

2030 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை கோருவதற்கான இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (Ministry of Youth Affairs & Sports) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்று ஏலம் எடுக்கும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமாக அகமதாபாத் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோஸ்ட் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் இந்தக் கூட்டத்தில், குஜராத் அரசுக்கு மானிய உதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காமன்வெல்த்தை நடத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றால், அதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்ய குஜராத் அரசுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

ALSO READ: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான டிக்கெட் இலவசம்..!

அகமதாபாத்தில் நடத்த காரணம் என்ன..?


இதுகுறித்து வெளியான அறிக்கையில் “சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள் மற்றும் விளையாட்டு கலாச்சாரம் கொண்ட அகமதாபாத் ஒரு சிறந்த ஹோஸ்ட் நகரம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானம், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “சர்வதேச அளவில் மதிப்புமிக்க இந்த விளையாட்டுகளை நடத்துவது நாட்டில் தேசிய பெருமையையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும். இது ஒரு சிறந்த தேசிய அனுபவத்தை வழங்கும். இது ஒரு புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை ஒரு தொழில் விருப்பமாக ஊக்குவிக்கும்,” என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ: கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை.. எப்போது தொடங்குகிறது..?

விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால், 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு வருவார்கள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஊடக செய்தியாளர்கள் மற்றும் விளையாட்டு நிபுணர்களும் இந்த நிகழ்விற்கு வருவார்கள். இதன்மூலம், இது உள்ளூர் வணிகங்கள், சுற்றுலா மற்றும் வருமானத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.