2025 Men’s Hockey Asia Cup: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான டிக்கெட் இலவசம்..!
Hockey Asia Cup Schedule 2025: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் இலவசம் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

2025ம் ஆண்டுக்கான ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை (2025 Men’s Hockey Asia Cup) வருகின்ற 2025 ஆகஸ்ட் 29ம் தேதி பீகார் மாநிலம் ராஜ்கிரில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் பீகார் நகருக்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டியின் நடத்தும் இந்திய ஹாக்கி அணியின் முதல் போட்டி 2025 ஆகஸ்ட் 29ம் தேதி சீனாவுடன் நடைபெறுகிறது. போட்டியை தொடங்குவதற்கு முன்பாக, ஹாக்கி இந்தியா (Hockey India) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், 2025 ஆசிய கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் உள்பட அனைத்து போட்டிகளையும், ரசிகர்கள் மைதானத்திற்குச் சென்று எந்தப் போட்டியையும் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.
ஹாக்கி இந்தியா அறிவிப்பு:
இதுகுறித்து, ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், “பீகார் 2025ல் நடைபெறும் ஹீரோ ஆண்கள் ஆசிய கோப்பை ராஜ்கிர் தொடரின் அனைத்து போட்டிகளுக்கும் நுழைவு இலவசம். வருகின்ற 2025 ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 2025 செப்டம்பர்ம் தேதி வரை புதிதாக கட்டப்பட்ட ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, பீகாரின் (ராஜ்கிர்) மையத்தில் ஹாக்கியின் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.




ஆசிய கோப்பை போட்டிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி..?
𝙄𝙉𝘿𝙄𝘼, 𝘼𝙍𝙀 𝙔𝙊𝙐 𝙍𝙀𝘼𝘿𝙔!!! 🤩
The Hero Asia Cup, Rajgir, Bihar 2025 is almost here — and your seat is waiting! 🙌
RSVP now and secure your complimentary entry to witness the best in Asia in action. 🏑✨
📲 Download the Hockey India App & book your tickets… pic.twitter.com/Ydnoi8zjQj
— Hockey India (@TheHockeyIndia) August 26, 2025
ஹாக்கி ரசிகர்கள் wwe.ticketgenie.in அல்லது ஹாக்கி இந்தியாவின் ஆப்பில் இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் . இங்கே, செயல்முறையை முடித்த பிறகு, உங்களுக்கு டிக்கெட் பிடிஎஃப் முறையில் கிடைக்கும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறை எளிமையாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆசிய கோப்பை ஹாக்கி கோப்பை அட்டவணை:
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி புதுதில்லியில் ஆண்கள் ஆசிய கோப்பை 2025 ஹாக்கி கோப்பை பற்றிய அப்டேட்டை வெளியிட்டார். இது 2025 ஆகஸ்ட் 29 முதல் 2025 செப்டம்பர் 7ம் தேதி வரை பீகாரின் ராஜ்கிரில் நடைபெறும்.
ALSO READ: விலகிய ட்ரீம் 11.. ஸ்பான்சராக வர ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனம்.. பிசிசிஐ முடிவு என்ன?
2025 ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியாவின் அட்டவணை
- 2025 ஆகஸ்ட் 29: இந்திய ஹாக்கி vs சீன ஹாக்கி
- 2025 ஆகஸ்ட் 31: இந்திய ஹாக்கி vs ஜப்பான் ஹாக்கி
- 2025 செப்டம்பர் 1: இந்திய ஹாக்கி vs கஜகஸ்தான் ஹாக்கி
2025 ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை அட்டவணையில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியாவுடன் சீனா, ஜப்பான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் சீன தைபே, மலேசியா, தென் கொரியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் 2025 ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை போட்டியில் இருந்து தனது பெயரை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு வங்கதேசம் சேர்க்கப்பட்டது.