Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Cricket Sponsorship: விலகிய ட்ரீம் 11.. ஸ்பான்சராக வர ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனம்.. பிசிசிஐ முடிவு என்ன?

Dream11 Sponsorship Ends: 2025 ஆசியக் கோப்பைக்கு முன்னர், ட்ரீம்-11 நிறுவனம் ஆன்லைன் கேமிங் சட்டத்தால் ஸ்பான்சர்ஷிப்பை முடித்துக் கொண்டது. இதனால், பிசிசிஐ புதிய ஸ்பான்சரைத் தேடி வருகிறது. டொயோட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. பிசிசிஐ விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

India Cricket Sponsorship: விலகிய ட்ரீம் 11.. ஸ்பான்சராக வர ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனம்.. பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Aug 2025 08:18 AM

2025 ஆசிய கோப்பைக்கு (2025 Asia Cup) சற்று முன்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு ஸ்பான்சர்ஷிப் சிக்கலை எதிர்கொண்டது. ஆன்லைன் பண விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்திய அணியின் தற்போதைய டைட்டில் ஸ்பான்சரான ட்ரீம்-11 (Dream 11) பின்வாங்கியுள்ளது. பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவ்ஜித் சைகியா, வாரியமும் ட்ரீம்-11ம் ஒப்பந்தத்தை பாதியிலேயே முடித்துவிட்டதாகவும், அத்தகைய நிறுவனங்களுடன் இனி எந்த ஸ்பான்சரும் இருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் இப்போது ஆசிய கோப்பைக்கு முன்பு புதிய ஸ்பான்சரைத் தேர்ந்தெடுக்கும் சவாலை பிசிசிஐ எதிர்கொள்கிறது. இந்த நிலையில், 65 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒரு நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

ALSO READ: ஆசியக் கோப்பைக்கு முன்பு அதிர்ச்சி.. பிசிசிஐ – ட்ரீம் 11 ஒப்பந்தம் முறிவு.. டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா இந்திய அணி?

அடுத்த டைட்டில் ஸ்பானசர் யார்..?

வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பைக்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பு, பிசிசிஐ மற்றும் ட்ரீம்-11 ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தன. இந்த ஒப்பந்தம் 2023 இல் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டது, இது அடுத்த ஆண்டு அதாவது 2026 இல் முடிவடைய இருந்தது. ஆனால் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின் காரணமாக, ட்ரீம்-11 அதன் முக்கிய வணிகம் நிறுத்தப்பட்டதால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐ இந்த நிறுவனத்தையோ அல்லது அத்தகைய எந்த நிறுவனத்துடனும் இனி ஒப்பந்தம் செய்யாது முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.

 ஆர்வம் காட்டும் டொயோட்டா மோட்டார்ஸ்:

ட்ரீம் 11 விலகியதால் இந்திய அணி எந்த ஸ்பான்சரும் இல்லாமல் ஆசிய கோப்பையில் விளையாட வேண்டும்.  ஆனால் இதற்கிடையில், பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா, இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான டொயோட்டா, இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக மாற விரும்புகிறது. இந்த நிறுவனம் டொயோட்டா கிர்லோஸ்கருடன் கூட்டு முயற்சியின் கீழ் இந்தியாவில் இயங்குகிறது. கடந்த 2024-25 நிதியாண்டில், இது ரூ.56500 கோடிக்கு மேல் சம்பாதித்தது.

ALSO READ: ஆசியக் கோப்பையில் எந்த அணி எப்போது யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை விவரம் இதோ!

பிசிசிஐ விரைவில் முடிவு எடுக்கும்:

டொயோட்டா போன்ற பெரிய நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் ஆர்வம் காட்டினால், பிசிசிஐ அதைப் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் டொயோட்டா மோட்டார்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக இணைந்தது. அதற்கு முன்பு அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தம் செய்ந்திருந்தது. அறிக்கையின்படி, டொயோட்டா மட்டுமல்ல, ஒரு ஃபின்-டெக் நிறுவனமும் இந்திய அணியுடன் சேர விருப்பம் தெரிவித்து வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. பிசிசிஐ யாருடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது என்பது விரைவில் தெரியவரும். ஆனால், ஸ்பான்சர் இல்லாமல் ஆசிய கோப்பையில் விளையாடுவதைத் தவிர்க்க வாரியம் விரும்பினால், விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.