Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவின் ஏழை முதல்வர் இவரா? அப்போ பணக்காரர் யார்? லிஸ்டில் CM ஸ்டாலின் எங்கே!

Richest Chief Minister In India : நாட்டில் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வருகிறது. இவரிடம் மொத்தமாக ரூ.931 கோடி மதிப்பில் சொத்து இருக்கும் நிலையில், கடன் மட்டுமே ரூ.10 கோடிக்கு மேல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏழை முதல்வர் இவரா? அப்போ பணக்காரர் யார்? லிஸ்டில் CM ஸ்டாலின் எங்கே!
பணக்கார முதல்வர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Aug 2025 11:58 AM

சென்னை, ஆகஸ்ட் 24 :  இந்தியாவிலேயே பணக்கார முதல்வர்கள் (Richest CM) மற்றும் ஏழ்மையான முதல்வர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாட்டின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஏழ்மையான முதல்வர் மம்தா பானர்ஜியும் பட்டியலில் உள்ளனர். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பார்ப்போம். இந்தியாவில் மொத்தம் 31 முதல்வர்கள் உள்ளனர்.  இதில் மணிப்பூரில் மட்டும் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. எனவே, நாட்டில் உள்ள முதல்வர்களில் யார் யார் பணக்காரர்கள் அவர்களது சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் மூலம் இந்த பட்டியலை உருவாக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது

இந்தியாவின் பணக்கார முதல்வர்

இதன்படி,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டில் பணக்கார முதல்வராக இருந்து வருகிறார். இவரிடம் மொத்தமாக ரூ.931 கோடி மதிப்பில் சொத்து வைத்துள்ளாராம். இதில், ரூ.810 கோடிக்கும் அதிகமான அசையும் சொத்துக்களும், ரூ.121 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்களும் அவர் வைத்துள்ளார். 1992ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தொடங்கிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற பால் நிறுவனத்தின் மூலமே அவருக்கு பெரும்பாலான வருமானம் கிடைக்கிறது. மேலும், பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2025ஆம் ஆண்டு ரூ.4,500 கோடிக்கு இருப்பதாக தெரிகிறது.

Also Read : கற்களால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்.. ம.பி பாரம்பரிய நிகழ்வில் 1,000 பேர் காயம்!

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் அருணாச்சல பிரதேச முதல்வர் பிரேமா கண்டு. இவர் நாட்டின் இரண்டாவது பணக்கார முதல்வராக உள்ளார். அவர் ரூ.332 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கிறார். ரூ.165 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.167 கோடி அசையா சொத்துக்களும் வைத்துள்ளார். பட்டியலில் அடுத்ததாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளார்.

தமிழக முதல்வர் எங்கே?

இவர் ரூ.21 கோடி அசையும் சொத்துகளும், ரூ.30 கோடியில் அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.51 கோடி சொத்துகளை கொண்டுள்ளார். இதில் மிகவும் ஏழ்மையான முதல்வராக மம்தா பானார்ஜி உள்ளர்ர். அவரிடம் ரூ. 15.38 லட்சம் சொத்துக்கள் மட்டுமே உள்ளது. அவரிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த சொத்துக்களைக் கொண்ட மற்ற முதல்வர்களில் ஜம்மு  காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அடங்குவர். அவருக்கு ரூ.55.24 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1.18 கோடி சொத்துக்களை மட்டுமே அவர் வைத்துள்ளார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 8.88 கோடியாக உள்ளது.

Also Read : உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.180 கோடிக்கு மேல் கடன்களுடன் முதலிடத்தில் உள்ளார். கர்நாடகாவின் சித்தராமையா ரூ.23 கோடிக்கு மேல் கடன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடிக்கு மேல் கடன்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.