Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்.. முகத்தில் 17 தையல்கள்!

College Student Attacked by Stray Dogs | உத்தர பிரதேசத்தில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்துச் சென்ற மாணவியை தெரு நாய்கள் கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்.. முகத்தில் 17 தையல்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Aug 2025 07:11 AM

லக்னோ, ஆகஸ்ட் 24 : லக்னோவில் (Lucknow) தெருநாய்கள் கடித்து குதறியதில் கல்லூரி மாணவியின் முகத்தில் 17 தையல்கள் போடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி முடிந்து மாணவி வீட்டிற்கு நடந்து சென்ற நிலையில், சாலையில் இருந்த நாய்கள் மாணவியை கடித்து குதறியுள்ளன. முகத்தில் மட்டுமன்றி, உடலில் பல்வேறு இடங்களிலும் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாய்களால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்

உத்தர பிரதேச மாநிலம் ஷியாம் நகர் பகுதியில் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி வைஷ்ணவி சாவு. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஆகஸ்ட் 20, 2025 அன்று கல்லூரி முடிந்து வழக்கம்போல் மாணவி வீட்டிற்கு நடந்த சென்றுள்ளார். அப்போது, சாலையில் நடந்த சென்ற கல்லூரி மாணவியை விரட்ட தொடங்கிய தெருநாய்கள் அவரை ஆக்ரோஷமாக கடித்து குதிறியுள்ளன. இதனால் நிலை தடுமாறி மாணவி கீழே விழுந்த நிலையில், நாய்கள் அவரது முகத்தில் கொடூரமாக கடித்துள்ளன. அதன் காரணமாக அவரது வலது கன்னத்தில் ஒரு பகுதி கிழிந்து தொங்கியுள்ளது.

இதையும் படிங்க : காதலுக்கு நோ சொன்ன பெண்… காருடன் ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி பின்னணி

முகத்தில் மட்டும் 17 தையல்கள் – மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

அதுமட்டுமின்றி மூக்கு, கை, கால்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்கள் கடித்த குதிறியதால் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்து குதிறிய நிலையில், அலறி துடித்த மாணவியின் குரலை கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் நாய்களிடம்  இருந்த மாணவியை காப்பாற்றியுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த மாணவியை அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய மருத்துவர்கள், நாய்கள் கடித்ததால் மாணவியின் முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 10ஆம் வகுப்பு மாணவனை கொன்ற 8ம் வகுப்பு மாணவன்.. சிக்க வைத்த ஸ்க்ரீன்ஷாட்!

தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி மாணவியை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.