10ஆம் வகுப்பு மாணவனை கொன்ற 8ம் வகுப்பு மாணவன்.. சிக்க வைத்த ஸ்க்ரீன்ஷாட்!
Ahmedabad School Issue: அஹமதாபாத் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் 10ம் வகுப்பு மாணவனைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மாணவனின் நண்பனுடனான சாட் உரையாடல் வெளியாகியுள்ளது. இதில் அந்த மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், ஆகஸ்ட் 21: குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பான திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே மோதல் போக்கு, போதைப் பழக்கம் உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குறைந்த பாடில்லை. இப்படியான நிலையில் அஹமதாபாத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஹமதாபாத்தில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களிடையே சீனியர், ஜூனியர் என்ற தகுதி வேறுபாட்டின் கீழ் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
கொலை செய்த மாணவன்
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்தும், மாணவர்களின் பெற்றோர்களிடம் எச்சரிக்கை விடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இப்படியான நிலையில் கடந்த 2025, ஆகஸ்ட் 19ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவனை 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்




உயிரிழந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். அவர்கள் பள்ளி பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியது மற்றும் ஊழியர்களைத் தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முடிந்தால் போய் சொல்லிக்கொள்
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கொலையை செய்த மாணவன், அவனது நண்பன் ஒருவனிடம் பேசும் உரையாடல் அடங்கிய ஸ்கிரீன்ஷாட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மாணவனிடம், இன்று ஏதாவது செய்தாயா? என நண்பர் கேட்கின்றான். அதற்கு ஆம் என பதில் வர, நீங்க யாரையாவது கத்தியால் தாக்கினாயா என பதில் கேள்வி கேட்கிறார். உடனே கொலை செய்த மாணவன் உனக்கு யார் சொன்னது என கேட்க, உடனே எனக்கு போன் பண்ணு என நண்பன் தெரிவிக்கிறான். ஆனால் நான் என் தம்பியுடன் இருக்கிறேன். அவனுக்கு இதெல்லாம் தெரியாது என குற்றம் செய்த மாணவன் கூறுகிறான்.
இறுதியாக பாதிக்கப்பட்ட மாணவன் இறந்துவிட்டதாக நண்பன் கூற, சாலையில் ஒரு தெரிந்தவரை சந்தித்ததாகவும், அவர் அதைப் பற்றி தனக்குச் சொன்னதாகவும் நண்பர் விளக்கம் கொடுத்துள்ளார். இதனைக் கேட்டு டென்ஷனான கொலை செய்த மாணவன், அவனிடம் போய் நான் தான் செய்தேன் என சொல்” என கூறும் உரையாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.