Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்கலைகழகத்தில் பர்தா அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் காரணம்

Chennai Crime News : சென்னை பல்கலைக்கழகத்தில் பர்தா அணிந்தபடி, கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். நிதி நெருக்கடியில் இருப்பதால், தனது தோழியை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்து, பர்தாவுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்ததாக கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பல்கலைகழகத்தில் பர்தா அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர்..  கைது செய்த போலீஸ்.. ஷாக் காரணம்
சென்னை பல்கலைக்கழகம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 20 Aug 2025 08:59 AM

சென்னை, ஆகஸ்ட் 20 :  சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பர்தா அணிந்தபடி, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது காதலியை பார்த்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி, இதுபோன்ற பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எப்போதுமே சென்னை பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்படும். எப்போது, மாணவர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பர்தா அணிந்து கொண்டு, கத்தியுடன் இளைஞர் சுற்றித்திரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணா சதுக்கம் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ஒருவர் பர்தா அணிந்தபடி நடந்து சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அவரை வழிமறித்து போலீசார் அவரை விசாரித்தனர். பர்தாவை கழட்ட சொல்லி இருக்கின்றனர். அப்போது, அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரது வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 3 கத்திகள் இருந்துள்ளது. இதனை அடுத்து, அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சௌகார்பேட்டையைச் சேர்ந்த 24 வயதான கரண் மேத்தா என்பது தெரியவந்துள்ளது.

Also Read : நாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்.. பலியான விசைத்தறி தொழிலாளி!

பல்கலைக்கழத்தில் பர்தா அணிந்த இளைஞர் கைது

இதனை அடுத்து, போலீசார் ஏன் பர்தா அணிந்து கத்தியுடன் சுற்றித்திரிவதாக போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்அதாவது, ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வருவதாகவும், இதற்கான தனியார் வங்கியில் கடன் வாங்கியதாகவும் அவர் கூறினார். இந்த கடனை அடைப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, ரூ.10 லட்சத்தை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கடன் நெருக்கடியால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், கடன் தொகையை வங்கி நிறுவனமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருவதாகவும் கூறினார். இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தனது தோழியை பார்த்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து, பர்தா அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்றதாக அவர் கூறினார்.

Also Read : துன்புறுத்திய கணவன்.. ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி.. சென்னையில் ஷாக்

தோழியை பார்த்துவிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் கருதினேன் என அவர் வாக்குமூலம் அளித்தார். துர்நாற்றம் வீசிய பிறகு தான் போலீசார் என் உடலை மீட்பார்கள் எனவும் இதனால் என் முகம் அடையாளம் தெரியாது. பர்தா அணிந்தால் நான் பெண் என போலீசார் நினைத்துவிடுவார்கள். நான் இறந்தால் என் தாயாரும் மனம் உடைந்து போவார் என கருதி தான், இதுபோன்று பர்தா அணிந்து கொண்டதாக அவர் விளக்கம் அளித்தார். இதனை அடுத்து அந்த இளைஞர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.