புது மெட்ரோ ரூட்.. சென்னை மக்களுக்கு அடுத்த சப்ரைஸ்.. தொடங்கும் பணிகள்!
Chennai Koyembedu Pattabiram Metro : சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தெடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோயம்பேடு-பட்டாபிராம் இடையே 21.7 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 19 : சென்னை கோயம்பேடு – பட்டாபிராம் (Koyembedu – Avadi – Pattabiran Metro) வரையிலான மெட்ரோ வழித்தடம் (Chennai Metro) ரூ.9.928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, இதற்கு ரூ.ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. இந்த மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது.
தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு – பட்டாபிராம் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, இதற்கு ரூ.ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. இது கோயம்பேடு, ஆவடி, பட்டாபிராம் ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும்.
Also Read : ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
கோயம்பேடு டூ பட்டாபிராம் மெட்ரோ பணிக்கு ஒப்புதல்
🚨Tamil Nadu has given givem nod for Chennai Metro’s 21.76 km Koyambedu–Avadi–Pattabiram corridor. 2,442 Crs sanctioned for land acquisition and utility shifting with work to begin soon… #Chennai #Metro Ⓜ️🚊 pic.twitter.com/XMU1tZtbzh
— Chennai Updates (@UpdatesChennai) August 19, 2025
இதில் பாடிபுதுநகர், கோல்டன் பிளாட் சந்திப்பு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் நிலையம், அம்பத்தூர் OT, திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம், பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்கள் அமையும். இது சென்னையின் முக்கிய இடத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடும்.
Also Read : பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!
கோயம்பேடு-ஆவடி-பட்டாபிராம் வழித்தடம் பணிகளுக்கு மொத்தம் ரூ.9,928.33 கோடியாகும். இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு ரூ.2,442 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்ட பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் நில ஆய்வுகள், புவி தொழில்நுட்ப ஆய்வு, மரங்களை வெட்டுதல் மற்றும் மறு நடவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.