Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!

Palani Murugan Temple : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக 35 நாட்கள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.

பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!
பழனி முருகன் கோயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Aug 2025 14:53 PM

திண்டுக்கல், ஆகஸ்ட் 19 : பழனி தண்டயுதபாணி கோயிலில் (Palani Murugan Temple) 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை (Palani Temple Cable Service) தொடங்கப்பட உள்ளது. 35 நாட்களுக்கு பிறகு நாளை காலை 9 மணி முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபானி சுவாமி கோயில் உள்ளது. பழனி மலையில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மின் இழுவை, ரோப் கார் சேவையை பயன்படுத்தி தரிசித்து வருகின்றனர்.

அதில், குறிப்பாக ரோப் கார் சேவையை பயன்படுத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். இதனால், அவ்வப்போது ரோப் காரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.

Also Read : திருத்தணியில் சோகம்.. தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலி

பழனி கோயிலில் ரோப் கார் சேவை ரத்து

31 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் மின் இழுவை மற்றும் படிப்பதையாக வழியாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் முடிந்து, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் பக்தர்கள், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை காலை 9 மணி முதல் பக்தர்கள் ரோப் சேவையை பயன்படுத்தி தரிசனம் மேற்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் பழனி கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.94 கோடி செலுத்தி உள்ளனர்.

Also Read : கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு.. அமைச்சர் போட்ட உத்தரவு..

மேலும், தங்கம் 107 கிராமும், வெள்ளி 25,509 கிராமும் கிடைத்துள்ளது. அதோடு, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் கிடைத்துள்ளன. இவை தவிர பித்தளை வேல், வாட்ச், நவதானியங்களை உள்ளிட்டவையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.