Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோயில்களில் இனி இந்த பொருட்களுக்கு தடை.. பக்தர்களே நோட் பண்ணுங்க.. அறநிலையத்துறை அறிவிப்பு!

Plastic Ban In Tamil Nadu Temples : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 12 திருக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த அறநிலையத்துறை தடை விதித்தள்ளது. திருச்செந்தூர், திருத்தணி, வடபழனி உள்ளிட்ட 12 கோயில்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாறாக, இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோயில்களில் இனி இந்த பொருட்களுக்கு தடை.. பக்தர்களே நோட் பண்ணுங்க.. அறநிலையத்துறை அறிவிப்பு!
கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Aug 2025 07:17 AM

சென்னை, ஆகஸ்ட் 17 : தமிழகத்தில் 12 கோயில்களில்  (Tamil Nadu Temples) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை (Plastic Ban) விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதுபிளாஸ்டிக் பொருட்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச்சூழல் அமைப்புகளை சேதப்படுத்துவது மட்டுமில்லாமல், மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.  பிளாஸ்டிக் பயன்பாட்டால் பல்வேறு நோய்களுடம் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடைகள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இதன் மூலம், வணிக கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள், பாட்டில்கள், கோப்பைகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை மீறும் கடைகள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அறநிலையத்துறை  பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முக்கியமான 12 கோயில்களில்  பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  12 கோயில் நிர்வாகங்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

Also Read : திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?

12 கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

அதன்படி, சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்நாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி கோயில் என 12 கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read : கோலாகலமாக தொடங்கிய திருச்செந்தூர் ஆவணி திருவிழா!

இந்த 12 கோயில்கள் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளதுஇந்த 12 கோயில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பதிலாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழப்பொருட்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இனி கோயில்களுக்கு வரும்போது, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லக் கூடாது. மேலும், கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாடு  இனி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.