Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை.. ரயிலில் இருந்து இறக்கிவிட்ட நபர்.. சென்னையில் அதிர்ச்சி!

Chennai Sanatorium Railway Station : சென்னை சானடோரியம் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த 3 குழந்தையை ரயில்வே அதிகாரிகள் மீட்டுள்ளனர். கடற்கரை - தாம்பரம் ரயிலில் பயணித்த நபர், சானடோரியம் ரயில் நிலையத்தில் குழந்தையை இறக்கிவிட்டு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை.. ரயிலில் இருந்து இறக்கிவிட்ட நபர்..  சென்னையில் அதிர்ச்சி!
ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Aug 2025 09:18 AM

சென்னை, ஆகஸ்ட் 17 : சென்னை சானடோரியம் ரயில் நிலையத்தில் (Chennai Sanatorium Railway)  3 வயது குழந்தை தனியாக சுற்றி வந்ததை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் குழந்தையை மீட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சியில் சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து குழந்தையை இறக்கி விடுவது பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, கடற்கரைதாம்பரம் வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் எப்போது அதிமாகவே இருக்கும். கடற்கரைதாம்பரம் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வார நாட்களில் பயணிகள் கூட்டம் அதிமாக இருக்கும். இந்த நிலையில் தான் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரோந்து பணியில்  ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சானடோரியம் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை நடைமேடையில் தனியார் சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்த பாதுகாப்புப் படை காவலர், உடனே  3 வயது குழந்தையை மீட்டு, நடைமேடையில் இருந்த பயணிகளிடம் கேட்டிருக்கிறார். ஆனால், யாரும் தன்னுடைய குழந்தை என கூறவில்லை. இதனை அடுத்து, 3 வயது குழந்தையை செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள ஆர்.பி.எஃப் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Also Read : ஒடிசாவை சேர்ந்த பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டுகள்..

ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை

இதனை அடுத்து, அங்குள்ள அதிகாரிகள் ஆலந்தூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்.

அப்போது, அதில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் அதிகாலை 4.20 மணியளவில் சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து ஒருவர் 3 வயது குழந்தையை இறக்கி விட்டது பதிவாகி இருந்தது. அந்த நபர் குழந்தையை நடைமேடையில் விட்டுவிட்டு, தாம்பரம் நோக்கி புறப்படும் ரயிலில் அவர் ஏறினார்.

Also Read : அதிமுக பேனர் விழுந்து விபத்து.. நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி..

இதனால், குழந்தையை யாரேனும் கடத்தி வந்து இறக்கி விட்டுச் சென்றனரா என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து குழந்தையை இறக்கி விட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.