Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒருதலைக் காதலால் விபரீதம்.. 9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime News : சென்னை பல்லாவரத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை, இளைஞர் கழுத்தறுத்து, தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற போது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவி மற்றும் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

ஒருதலைக் காதலால் விபரீதம்.. 9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Aug 2025 10:15 AM

சென்னை, ஆகஸ்ட் 16 : சென்னை பல்லவாரத்தில் காதலித்த மறுத்த 9ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. காதலித்த மறுத்த ஆத்திரத்தில் தாய் கண்முன்னே மாணவியை கழுத்து அறுத்துள்ளார். பெண்கள், சிறுமிகள் எதிராக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. காதல் விவகாரத்தில் இளம்பெண்கள், பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, சட்டங்களையும் கடுமையாக இயற்றி வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம்.

இவருக்கு வயது 25. இவர் சென்னையில் பழைய பல்லவாரத்தில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பல்லாவரம் பகுதியில் உள்ள 14 வயது மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்கிடையில், செல்வம், 14 வயது சிறுமியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை தனது காதலை சிறுமியிடம் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால், அதற்கு சிறுமி மறுத்து வந்துள்ளார். மேலும், சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்தும் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று மாணவியின் வீட்டிற்கு செல்வம் சென்றிருக்கிறார்.

Also Read : மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?

9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

அங்கு , மாணவியின் தாயிடம் தனது காதல் பற்றி கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், உடனே வீட்டை வெளியேற வேண்டும் என கூறி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாயாரின் கண் எதிரே மாணவியின் கழுத்தை அறுத்தார்.

பின்னர், வீட்டிற்கு வெளியே வந்து, அதே கத்தியால் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த காயங்களுடன் கிடந்த மாணவி மற்றும் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம்.. தம்பியை சரமாரியாக வெட்டிய கும்பல்.. சிவகாசியில் பயங்கரம்!

மாணவிக்கு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இளைஞர் செல்வம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் கழுத்திலும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.