Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. பகீர் காரணம்.. சென்னையில் சம்பவம்!

Chennai Murder : சென்னை கோட்டூர்புரத்தில் மனைவியை கணவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, கணவர் மனைவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. பகீர் காரணம்.. சென்னையில் சம்பவம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Aug 2025 07:15 AM

சென்னை, ஆகஸ்ட் 17 : சென்னை கோட்டூர்புரத்தில் மனைவியை, கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கணவன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது.  குறிப்பாக, பெண்களுக்கு எதிரான கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனை தடுக்க மாநில அரசும் தொடர்ந்து நடந்து வருகிறது- இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்பகதூர் சாஸ்திரி (36). அவரது மனைவி சஞ்சா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பிழைப்பு தேடி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தள்னர்.

இவர்கள் கடந்த 8 மாதங்ளாக கோட்டூர்புரத்தில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்துள்ளனர். சன்பகதூர் சாஸ்திரி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில், இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. கணவர் சன்பகதூர் வேறு பெண்களுடன் பேசி வருவதாக மனைவி சஞ்சாவிற்கு சந்தேகம் எழுந்ததுஇதன் காரணமாக, இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. யாருடனும் பேச வேண்டாம் என மனைவி அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது.

Also Read :  அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்பகதூர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சஞ்சாவின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து வெளியே சென்றிருக்கிறார். இதனை பார்த்த, இரு குழந்தைகள் அலறி அடித்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து பார்த்தனர்.

அப்போது, ரத்த வெள்ளத்தில் பெண் சஞ்சா கிடந்துள்ளார். இதுகுறித்து உடனே கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவ்ல தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Also Read : முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.. வாகன பேரணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி..

இதனை அடுத்து, போலீசார் சஞ்சாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மனைவியை கொன்றதாக கணவர் சண்பகதூர் கைது செய்யப்பட்டார்.