AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை, நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 16 Aug 2025 06:15 AM IST

சென்னை, ஆகஸ்ட் 16 : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.  2025 ஜூலை மாதத்தில் தமிழகத்தில் வெப்பம் இருந்தது. ஜூலை மாத தொடக்கத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு மாதத்தின் கடைசியில் பரவலாக மழை இருந்தது. அதன்பிறகு, 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கொங்கு, டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால், வெப்பம் முற்றிலுமாக தணிந்துள்ளது. இதில் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Also Read : புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..

அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். அதாவது, 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னையில் 2024-ல் மட்டும் 20,000 நாய்க்கடி சம்பவங்கள்.. நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!

சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநைல 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us