ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் மாற்றம்.. எப்போது? வெளியான அதிகாரப்பூர்வு அறிவிப்பு
TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2025 நவம்பர் 15,16ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருவிழா நடைபெற உள்ள நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை, ஆகஸ்ட் 14 : ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Exam 2025) தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 நவம்பர் 1,2ஆம் தேதிகளில் நடந்த நிலையில், தற்போது அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 நவம்பர் 15,16ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தாள் 1 மற்றும் 2 என்ற வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு 2024ஆம் ஆண்டு நடைபெறாத நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 நவம்பர் 1ஆம் தேதி தாள் 1, 2025 நவம்பர் 2ஆம் தேதி தாள் 2 தேர்வு நடைபெறும் என ஆசியரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் மாற்றம்
ஆனால், இந்த தேர்வு தேதியை மாற்ற கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதாவது, 2025 நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வை மாற்றி, வேறு ஒரு தேதியில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு தேதியை மாற்றி உள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 நவம்பர் 15ஆம் தேதியும், தாள் 2 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.




Also Read : சென்னை டூ திருச்சி.. முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க!
விண்ணப்பம்
இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2025 செப்டம்பர் 8ஆம் தேதியாகும். டெட் தேர்வுக்கு டிஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.600 செலத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும். இரண்டு தேர்வும் எழுத உள்ளவர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Also Read : தென் மாவட்ட பயணிகளே.. ஜிஎஸ்டி சாலையில் போகாதீங்க.. ரூட் மாற்றம்!
தகுதி
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1க்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், தொடக்க கல்வியில் பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். தாள் 2 தேர்வுக்கு இளங்கலை பட்டம் மற்றும் தொடர்புடைய இளங்கியல் கல்வியல் பட்டம் பெறிறருக் வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் B.ED முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றலாம். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.