TET தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
TN TET Exam 2025 : 2025 நவம்பர் 1,2ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 2025 நவம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், 2025 செட்ம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், டெட் தேர்வு தேதியை மாற்ற கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 12 : டெட் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, டெட் தேர்வின் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் 2025 நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பம் 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், 2024ஆம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவறால் விண்ணப்பிக்க வேண்டும்.
TET தேர்வு தேதி அறிவிப்பு
அதன்படி, டெட் தேர்வின் தாள் 1 2025 நவம்பர் 1ஆம் தேதியும், தாள் 2 2025 நவம்பர் 2ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு 2025 நவம்பர் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், 2025 செப்டம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்ப்பட்டுள்ளது. டெட் தேர்வுக்கு டிஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.600 செலத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும்.




Also Read : ‘ஓஎம்ஆர் தாள்கள் பிரிக்கப்படவில்லை’ – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு!
தகுதிகள்
டெட் தேர்வு தாள் 1 எழுத 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றத்துடன், இரண்டு ஆண்டுகள் தொடக்கக் கல்வி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும், 4 வருட தொடக்கக் கல்வி இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டில் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். டெட் தேர்வு தாள் 2 எழுத 2 ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ மற்றும் டிப்ளமோ இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு மற்றும் B.ED முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது
டெட் தேர்வுக்கு 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Also Read : தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
டெட் தேர்வுமுறை
டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என நடைபெறும். இதில் தாள்களிலும் 150 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 மதிப்பெண் என்ற விதித்ததில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டு தேர்விலும் மொழி தாள் கட்டாயம். டெட் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 90 மதிப்பெண்கள் ஆகும். இதில் எஸ்சி, பிசி, எம்பிசி, மாற்றுத்திறனாளிகள் 82 மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தல்
2025 டெட் தேர்வு 2025 நவம்பர் 1,2ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் கல்லறை திருநாள் வழிபடுகிறார்கள். அன்றைய நாளில் டெட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்படடுள்ளது. எனவே, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறினார்.