Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அம்பேத்கர் சட்டப் பல்கலை: முதுநிலை படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்

Ambedkar Law University: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் (LLM) முதுநிலைப் படிப்புக்கான சேர்க்கை 2025 ஜூலை 16 அன்று தொடங்கியது. 2025 ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1000 கட்டணம். 260 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கர் சட்டப் பல்கலை: முதுநிலை படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Jul 2025 10:25 AM

சென்னை ஜூலை 16: சென்னையில் (Chennai) உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (Dr. Ambedkar Law University) கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் முதுநிலை படிப்புக்கான சேர்க்கை இன்று (2025 ஜூலை 16) தொடங்கியது. இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்கள் 2025 ஆகஸ்ட் 16, மாலை 5.45 மணி வரை www.tndalu.ac.in மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500 மற்றும் பிற மாணவர்களுக்கு ரூ.1000 வசூலிக்கப்படும். மொத்தமாக 260 இடங்கள் இந்த முதுநிலை படிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாடநெறிகள், தகுதி விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கால அவகாசத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதுநிலை படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த சீர்மிகு சட்டப் பள்ளியில் 2025-26 கல்வியாண்டிற்கான எல்எல்எம் (LL.M) முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (2025 ஜூலை 16) முதல் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு ஆண்டு கால படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கூடிய கடைசி நாள் 2025 ஆகஸ்ட் 16, மாலை 5.45 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சட்டத் துறையில் மேல்படிப்பு செய்ய விரும்பும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்எல்எம் படிப்புக்கு கல்வித் தகுதி, பாடநெறிகள், சேர்க்கை விதிமுறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 மற்றும் பிற சாதி பிரிவினருக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். மேலும், சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கான மொத்த இடங்கள் 260 ஆக உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் அவசரமாக முயற்சி செய்து, காலக்கெடு முடிவதற்கு முன் விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலை: ஒரு கண்ணோட்டம்

டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Dr. Ambedkar Law University) என்பது தமிழ்நாட்டில் சட்டக் கல்விக்காக அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், மாநிலத்தில் சட்டக் கல்வியை மேம்படுத்துவதும், சட்ட ஆராய்ச்சி மற்றும் அறிவைப் பரப்புவதுமாகும். சென்னை தரமணியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகிறது.

இதன் மூலம், சட்டக் கல்விக்கான பாடத்திட்டங்களை வகுப்பது, தேர்வு நடத்துவது, பட்டங்களை வழங்குவது போன்ற பணிகளை ஒருங்கிணைத்து தரமான சட்டக் கல்வியை உறுதி செய்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளையும், சட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்குகிறது. சமூக நீதி, சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.