Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Teacher Recruitment Board Exam : முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 உள்ளிட்ட தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. இத்தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில், அன்றைய தேதியில் குரூப் 4 தேர்வு நடைபெற இருப்பதல், முதுகலை ஆசிரியர் தேர்வை 2025 அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு..  எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Jul 2025 21:53 PM

சென்னை, ஜூலை 24 : தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் நிலை உள்ளிட்ட பணியிடங்களுக்கு (TRB Recruitment 2025) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறுவதால், முதுகலை ஆசிரியர் பணி தேர்வை 2025 அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழக அரசு வேகமாக நிரப்பி வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பி வருகிறது. ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரி கடந்த சில நாட்களாக போராட்டங்களும் நடந்தன. அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

டிஆர்பி தேர்வு ஒத்திவைப்பு

இதற்கிடையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் ஆசிரியர் பணிகளுக்கு தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணிணி பயிற்றுநர் நிலை 1 உள்பட 1,996 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதியாகும். இந்த நிலையில், இந்த தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

Also Read : அம்பேத்கர் சட்டப் பல்கலை: முதுநிலை படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்

இந்த நிலையில், இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. இத்தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறுவதால், முதுகலை ஆசிரியர் பணி தேர்வை 2025 அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தேர்வு வாரியமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read : குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

விண்ணப்பிப்பது எப்படி?

  • இத்தேர்வுக்கு trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் Apply Online என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அந்த பணியிடங்களுக்கு ஆப்ஷன் இருக்கும்.
  • அதன்பிறகு, ஒடிபி சரிபார்ப்புக்கு உங்கள் இமெயில் ஐடி, மொபைல் நம்பரை உள்ளீட வேண்டும்.
  • இதனை அடுத்து, விண்ணப்ப படிவம் தோன்றும். அதில், உங்களின் தனிப்பட்ட விவரம், கல்வி தொடர்பான விவரங்களை உள்ளீட வேண்டும்.
  • குறிப்பிட்ட வடிவமைப்பின்படி உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்வி ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.600, பட்டியலின, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.