Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை டூ திருச்சி.. முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க!

Chennai To Trichy Special Train : சுதந்திர தின தொடர் விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

சென்னை டூ திருச்சி.. முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க!
சிறப்பு ரயில்கள்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Aug 2025 19:05 PM

சென்னை, ஆகஸ்ட் 14 : சுதந்திர தின விடுமுறையையொட்டி (Independence  Day), சென்னையில் இருந்து திருச்சி (Chennai Trichy Train) முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து இந்த ரயில் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், அடுத்த நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்று கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.

இதனால், சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனால், சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துள்ளனஇதனால், பயணிகள் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், சிறப்பு ரயிலை 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று இரவு  இயக்க உள்ளது. அதாவது, சென்னையில் இருந்து திருச்சிக்கு 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று  முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்  என தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. 

Also Read : 3 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து.. எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

 


12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.  சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரயில், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை காலை திருச்சிக்கு 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 10.50 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு வந்தடைகிறது.

Also Read : தென் மாவட்ட பயணிகளே.. ஜிஎஸ்டி சாலையில் போகாதீங்க.. ரூட் மாற்றம்!

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவேரும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்திலும் இதே ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.