Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து.. எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் பொன்னேர் கவரப்பேட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இவ்வழித்தடத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

3  நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து..  எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?
மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Aug 2025 17:09 PM

சென்னை, ஆகஸ்ட் 14 : சென்னையில் மூன்று நாட்களுககு புறநகர் மின்சார ரயில்கள் ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 14,16ஆம் தேதி  மற்றும் 17ஆம் தேதி வரை பொன்னேரி கவரப்பேட்டை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது  மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறைந்த செலவு மற்றும் சரியான நேரத்திற்கு செல்வதால் பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.  பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க, அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 14,16ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி வரை பொன்னேரி கவரப்பேட்டை இடையே  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அவ்வழித்தடத்தில் மூன்ற நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மாலை 3.10 மணி வரை பொன்னேரி – கவரப்பேட்டை வழித்தடத்தில்  பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்… பயணிகள் பெரும் அவதி!

3 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து


அதன்படி, காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு சென்னை கடற்கரைகும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில்களும், மறுமார்க்கத்தில் காலை 10.55 மணிக்கும் இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டிசென்ட்ரல் வழித்தடத்தல் மதியம் 3.15, 2.30, மதியம் 12.00 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், மறுமார்க்கத்தில் காலை 10.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டைசென்ட்ரல் இடையே இரவு 9.00, மதியம் 3.10, மதியம் 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், மறுமார்க்கத்தில் மதியம் 12.10 மணிக்கும, 1.05 மணிக்கும் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் நெல்லூர்சூலூர்பேட்டை ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3.50 மணிக்கு அவ்வழித்டத்த்தல் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Also Read : 13 நாட்கள் போராட்டம்.. இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்த காவல் துறை..

மேலும், செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரதுத செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 3 மணிக்கு இயக்கப்படும் ரயில், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இவ்வழித்தடத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.