Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

13 நாட்கள் போராட்டம்.. இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்த காவல் துறை..

Sanitization Workers Arrest: சென்னையில் பணி நிரந்தரம், தனியார்மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் ஆகஸ்ட் 13, 2025 தேதியான நேற்று இரவு கைது செய்தனர்.

13 நாட்கள் போராட்டம்.. இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்த காவல் துறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 14 Aug 2025 08:01 AM

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: சென்னையில் பணி நிரந்தரம் கோரி சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 2025 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 13 நாட்கள் தொடர்ந்து இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதாக கூறி அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 13 2025 தேதியான நேற்று நள்ளிரவில் அங்கு திரண்டிருந்த அனைவரையுமே குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். சென்னையில் இருக்கக்கூடிய மண்டலம் 5 மற்றும் 6 அதாவது ராயபுரம் மற்றும் திருவிக நகர் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டனர்.

13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்:

சென்னை மாநகராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர்கள் தனியாருக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 1 2025 முதல் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் டென்ட்டுகள் அமைத்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் வேண்டும் தனியார் மயமாக கூடாது என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும் படிக்க: அரசுப்பள்ளி மூடலா? ஈபிஎஸ் கேள்வி

தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு:

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் மீறி போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாவர்கள் எனவும் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

கைது நடவடிக்கையில் காவல் துறையினர்:

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13 2025 அன்று மதியம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் கே என் நேருவுடன் எட்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர். உயர்நீதிமன்ற உத்தரவின் படி அங்கு காவல்துறையினர் மாலை முதல் குவிய தொடங்கினர். அவர்களை கலைந்து செல்லும்படி கேட்டும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில் இருவோடு இரவாக அங்கு திரண்டு இருந்த அனைவரையும் குண்டு கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

மேலும் படிக்க: தொழிலாளி மூக்கை கடித்த ராட்வீலர் நாய்.. பூந்தமல்லி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..

கைது செய்யும் நடவடிக்கை தெரிந்த சில அமைப்பினர் நள்ளிரவு என்றும் பொருட்படுத்தாமல் வருகை தர தொடங்கினர். இதனால் அங்கே வரக்கூடியவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் சற்று தாமதமானது. மேலும் ஆகஸ்ட் 14 2027 தேதியான இன்று காலை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கும் என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.