தொழிலாளி மூக்கை கடித்த ராட்வீலர் நாய்.. பூந்தமல்லி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..
Rottweiler Dog Attack: சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் கட்டுமான இடத்தில் பாதுகாப்பிற்காக கட்டி வைக்கப்பட்ட ராட்வீலர் நாய் அங்கு இருந்த தொழிலாளி ஒருவரை கடித்து குதறியுள்ளது. இதில் அந்த நபரின் மூக்கு துண்டாக விழுந்துள்ளது. தற்போது அவரை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 13, 2025: தமிழகத்தில் நாளுக்கு நாள் நாய் கடித்தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னை பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து கட்டுமான தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெரு நாய்கள் மட்டுமல்லாமல் வளர்ப்பு நாய்களும் தற்போது மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நாய் வகைகள் வளர்க்க தடை விதிக்கப்பட்ட போதிலும் இந்த நாய்களை செல்ல பிராணிகளாக பலரும் வளர்த்து வருகின்றனர்.
43 பேர் உயிரிழப்பு:
ஆக்ரோஷமான இந்த நாய் இனங்கள் செல்லப்பிராணிகளாக இருந்தாலும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது. 2024 ஆம் ஆண்டில் நாய் கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்ட அதில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எட்டு வாரங்களுக்குள் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்..
இந்நிலையில், தலைமை செயலகம் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மாநில அளவில் மேற்கொள்ளவும் கால்நடை துறை செயலாளர் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ராட்வீலர் நாய் கடித்து கட்டுமான தொழிலாளி படுகாயம்:
இந்த நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே இருக்கக்கூடிய கட்டுமான இடத்தில் பாதுகாப்புக்காக கட்டி வைக்கப்பட்டு இருந்த ராட்வீலர் நாய் அங்கே பணியாற்றி வந்த தொழிலாளி கணேஷ் என்பவரது மூக்கை கடித்து குதறி உள்ளது. இதில் அந்த நபரின் மூக்கு துண்டாக விழுந்து, கை கால் உள்ளிட்ட இடங்களிலும் கடித்ததால் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
இதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய சிலர் அவரை அங்கிருந்து உடனடியாக அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சமீபத்தில் கூட ராட்வீலர் நாய் 11 வயது சிறுவனை கடித்து குதறியதில் அந்த சிறுவன் படுகாயம் அடைந்தார்.