Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Schools Closure: தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகள் மூடலா..? தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்!

Government Schools Tamil Nadu: தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத 207 அரசுப் பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதாக வெளியான செய்தியை தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுத்துள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரித்தவுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும், பள்ளி மூடல் அரசின் கொள்கை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Schools Closure: தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகள் மூடலா..? தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்!
பள்ளிக் கல்வித் துறைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 13 Aug 2025 08:23 AM

சென்னை, ஆகஸ்ட் 13: மாணவர் சேர்க்கை (Admission of students) இல்லாத 207 அரசுப் பள்ளிகளை நிரந்தமாக மூடுவதாக வெளியான செய்தியை தொடக்கக் கல்வி இயக்குநரகம் (Directorate of Elementary Education) மறுத்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருவதால், இந்த மூடல்கள் தற்காலிகமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டிற்கான தரவுகளின்படி, 207 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தற்போது மாணவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு விளக்கம்:

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்கள் இல்லாத 2027 பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தவுடன் இந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளி மூடல்கள் என்பது அரசின் கொள்கை முடிவு அல்ல. அதேபோல், பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கமல்ல, மாணவர் சேர்க்கை நிகழாத பள்ளிகள் மட்டுமே செயல்பாட்டில் இல்லை. சேர்க்கைக்கான தேவை இருப்பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்!

மேலும், ”தற்போதையை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தரவுகளின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் சுயநிதி பள்ளிகளை விட 1.75 லட்சம் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். வருகின்ற 2026-27 கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதிலும், அரசு பள்ளிகளில் தற்போதையை மாணவர்களை தக்கவைத்துக்கொள்வதிலும் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும்” என்றும் குறிப்பிட்டிருந்தது.

அரசு பள்ளிகளில் புதிய சேர்க்கை:

தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் கடந்த 2011ம் ஆண்டுல் 10.74 லட்சமாக இருந்தது. ஆனால், 2026ம் ஆண்டில் 8.78 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பெரும்பாலான சேர்க்கை இல்லாதம் அரசு பள்ளிகள் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ளன. அங்கு, பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகள் யாரும் இல்லை. சில பள்ளிகள் குடும்பங்கள் நகரப்புற அல்லது கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்வதால் அனைத்து மாணவர்களையும் தவறவிட்டோம். அதன்படி பிறப்பு விகிதம் குறைதல், குடும்பங்கள் நகர்ப்புற அல்லது பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்தல் மற்றும் தனியார் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு பெற்றோர்களின் விருப்பம் ஆகியவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான சரிவுக்கு முதன்மையாக காரணம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ALSO READ: மதுரை மாநகராட்சியின் வரி முறைகேடு.. மேயரின் கணவரை தூக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து கைது நடவடிக்கை!

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நடப்பு 2025-26 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 4,07,379 புதிய மாணவர்களை சேர்த்துள்ளதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.