Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

TNSTC Special Buses : தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சிறப்பு பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 12 Aug 2025 06:10 AM

சென்னை, ஆகஸ்ட் 12 : தொடர் விடுமுறையையொட்டி,  200 சிறப்பு பேருந்துகள் (Special Buses) இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது.  2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி,  பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.   தமிழகத்தில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது பேருந்துகள்.  தினமும் ஆயிரக்கணக்கான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டஙகளுக்கும்,  அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்தே இருக்கும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில்  பேருந்துகளில் கூட்டம் அதிமாகவே இருக்கும். இதனால், அவ்வப்போடு, விடுமுறை, பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 375 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி 570 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 15,16ஆம் தேதிகளில் 375 பேருந்து இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

Also Read : சென்ட்ரல் டூ அரக்கோணம்.. வருகிறது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது முதல் தெரியுமா?

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 100 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி 100 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஆகஸ்ட் 14,15ஆம் தேதிகளில் இரு நாட்கககு 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று 715 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read : இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..

பயணிகள் டிஎன்எஸ்டிசி மற்றும் செயலி மூலம் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.