Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குளிர்சாதன மின்சார பேருந்துகள்.. 11 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு..

AC Electric Bus: சென்னையில் மின்சார பேருந்துகள் சேவை கடந்த ஜூன் 30, 2025 முதல் மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 11, 2025 முதல், குளிர்சாதனம் உள்ள மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன மின்சார பேருந்துகள்.. 11 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு..
ஏசி மின்சார பேருந்து
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Aug 2025 10:50 AM

சென்னை, ஆகஸ்ட் 9, 2025: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தரப்பில் முதல் முறையாக குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவையானது 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து கழகம் தரப்பில் 125 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2025 ஜூன் 30 அன்று திறந்து வைத்தார். எரிபொருள் செலவு கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசை குறைக்கும் வகையிலும் இந்த மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 1225 பேருந்துகள் இயக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 625 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தமானது தனியார் நிறுவனத்துடன் கையெழுத்து ஆனது.

5 பேருந்து பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கம்:

சென்னையில் இருந்து ஐந்து பேருந்து பணிமனைகளில் அதாவது வியாசர்பாடி, பூந்தமல்லி, பல்லவன் இல்லம், பொரும்பாக்கம் மற்றும் தொண்டையார்பேட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து இந்த மின்சார பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதில் வியாசர்பாடி பேருந்து பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் படிக்க: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!

குளிர்சாதன மின்சார பேருந்துகள்:

அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து முதல் முறையாக 55 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளும் 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தாம்பரம் மக்களே.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!

இதனை தொடர்ந்து மற்ற பணிமனைகளில் இருந்தும் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லம் பேருந்து பணிமனையில் இருந்து 145 பேருந்துகளும், பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 பேருந்துகளும், தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து 100 பேருந்துகளும் விரைவில் முழு வீச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிநவீன வசதிகள்:

மக்களின் வசதிக்காக தாழ்த்தள படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வெப்பத்தை உமிழாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கை வசதிகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், லக்கேஜ் வைப்பதற்கான தனி இடங்கள் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.