Rameswaram Fishermen Strike: இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு.. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
Rameswaram Fishermen's Indefinite Strike: இலங்கை கடற்படையினரால் 8 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 700க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் நங்கூரமிட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பு அபாயத்தில் உள்ளனர்.

இராமேஸ்வரம், ஆகஸ்ட் 11: இலங்கை கடற்படை (Sri Lanka Navy) சிறைபிடித்த இராமேஸ்வரம் மீனவர்களை (Rameswaram Fishermen) விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 11ம் தேதி காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதையடுத்து, 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாததால், கரையோரம் நங்கூரமிட்டு நிலை நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் (Fishermen’s Indefinite Strike) காரணமாக மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படை அட்டூழியம்:
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியாக கூறி 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, இராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கம் தொடர் போராட்டங்களை ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், தமிழ்நாடு கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை பாதித்து, இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே மீண்டும் மீண்டும் இது பதற்றத்தை உருவாக்கி வருகிறது.




ALSO READ: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!
நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கூட்டத்தில், “இந்த கைதுகள் எங்கள் வாழ்க்கையை அழிக்கின்றன. மீன்பிடித்தல் எங்கள் ஒரே வாழ்வாதாரம் ஆகும். இந்தநிலையில், இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் எங்கள் இருப்பை நிச்சயமற்றதாக்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்:
Rameshwaram fishermen to undergo strike from today – https://t.co/SqMgMmDXbv Rameshwaram fishermen to undergo strike from today pic.twitter.com/0nZbUv6HPJ
— Chennaivision (@chennaivision) August 11, 2025
2025 ஆகஸ்ட் 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்துடன் போராட்டத்தினை தொடங்க இராமேஸ்வரம் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, வருகின்ற 2025 ஆகஸ்ட் 12ம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதனை தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ரயில் மறியல் மூலம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ளனர்.
ALSO READ: கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அந்த கடிதத்தில், 2025 ஆகஸ்ட் 6ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களும் அவர்களது படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். 2025ம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 17 கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன. தற்போது வரை 237 படகுகளும், தமிழ்நாட்டை சேர்ந்த 80 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.