Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Seeman: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!

Chennai Sanitation Workers' 10-Day Protest: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கியதற்கு எதிராக நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Seeman: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்..  தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Aug 2025 18:50 PM

சென்னை, ஆகஸ்ட் 10: தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் (Sanitation Workers Protest), தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பெருநகர சென்னை மாநகராட்டியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்புரம் மற்றும் திருவிக மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் நகராட்சியின் முடிவை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், 10வது நாளை எட்டியுள்ள துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தவிர்த்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்:


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டால், அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை பெற முடியும். சென்னையை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தனியாருக்கு கொடுத்தால் தமிழ்நாடு அரசுக்கு என்ன வேலை..? ஆட்சிக்கு வந்த 4 வருடத்தில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காதது ஏன்..? இப்படியான சூழ்நிலையில், எல்லாமே தனியார் மயமாக்கப்பட்டது என்றால், தமிழ்நாடு அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலை போடுதல், மின் உற்பத்தி விநியோகம், பராமரித்தல் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ALSO READ: எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!

நாம் தினந்தோறும் மூக்கை பிடித்து கொண்டு போடும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறோம். ஆனால், அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கல். 12 ஆண்டுகளுக்கு மேல் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன இடையூறு இருக்கிறது. காலம் காலமாக தமிழ்நாடு அரசில் போதிய நிதி இல்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்ட செலவுகள் ஏராளமாக செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர்கள் போராட்டம் ஏன்..?

கடந்த 2025 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ராயபுரம் மற்றும் திருவிக நகர் ஆகியவற்றில் திடக்கழிவு மேலாண்மையை தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் திட்டத்தை சென்னை பெருநகர மாநகராட்டி அறிவித்தது. இதற்கு முன்னதாக, சென்னையில் 15 மண்டலங்களில் 10 மண்டலங்கள் ஏற்கனவே ஸ்பெயினை தளமாக கொண்ட உர்பசர் – சுமீத் மற்றும் ஆந்திர பிரதேசத்தை தளமாக கொண்ட ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் போன்ற தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

ALSO READ: தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..

இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில், இடதுசாரி தொழிற்சங்க காங்கிரஸ், தொழிலாளர் முற்போக்கு சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் தலைமை தாங்குகின்றன.