Seeman: பீகார் மக்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா..? நாம் தமிழர் கட்சி சீமான் ஆதங்கம்..!
Bihar Voters in Tamil Nadu: பீகாரில் இருந்து 36 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, 7 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை, ஆகஸ்ட் 5: பீகாரில் இருந்து 36 லட்சம் வாக்காளர்கள் தனது வாக்காளர் பட்டியலில் இருந்து விலகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) சமீபத்தில் அறிவித்தது. இதில், சுமார் 7 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆகியோர், பீகாரில் இருந்து தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உயர்நீதிமன்றம் வேதனை..
தமிழ்நாட்டில் வாக்குரிமையா..?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 6.50 லட்சம் பீகார் வாக்காளர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது. அது நாங்கள் இருக்கும் வரை நடக்காது. வட இந்தியர்களை தமிழ்நாடு வாக்காளர்களாக சேர்ப்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் வருவதில் என்ன தவறு என்றும், வாக்குரிமை கொடுப்பதில் என்ன தவறு என்றும் ஒரு சிலர் கேட்குகிறார்கள். ஆளும் திமுக அரசு இதனை பற்றி கவலைப்படவில்லை. மாறாக வட இந்தியர்களின் வாக்குகளை வாங்குவதற்கு என்ன செய்யலாம் என்று திராவிட முன்னேற்ற கழகம் சிந்தித்து கொண்டிருக்கிறது.




இங்கு இந்தி பேசுபவர்களையும், இந்தியையும் திணித்து இது இந்தி பேசும் மற்றொரு மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறார். தமிழ்நாட்டின் இனி அரசியலையும், அதிகாரத்தையும் வட இந்தியர்கள் தீர்மானிப்பார்கள் என்ற நிலை உண்டாகிவிடுகிறது. கோயம்புத்தூர் தெற்கில் வாக்களித்தால் வெல்ல முடியும். ஆனால், அனைவரும் பாஜக வாக்காளர்கள்தான். அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது. அது நாமக இருக்கும் வரை நடக்காது” என்று தெரிவித்தார்.
ALSO READ: அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
முன்னதாக இதுகுறித்து பேசிய சீமான், “வட இந்திய மக்களை தமிழ்நாட்டின் வாக்காளர்களாக மாற்ற முயற்சிப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி. இந்த கொங்கோன்மைக்காகவும், ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்ற இந்திய தேர்தல் ஆணையத்தை ஒரு கைப்பாவையாக பயன்படுத்தி ஜனநாயக அமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதற்காகவும் பாஜகவை எதிர்த்து போராட அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.