அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஆகஸ்ட் 5, 2025 தேதியான இன்று, நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 5, 2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 5 2025 தேதி ஆன இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
ஆகஸ்ட் 6 2025 தேதி ஆன நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் தேனி திண்டுக்கல் ஈரோடு கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 7 2025 தேதி அன்று கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 2025 வரை தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வரும் 11, 12 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) 9,
பூதலூர் (தஞ்சாவூர்), புதுச்சேரி AWS (புதுச்சேரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), பத்துகண்ணு (புதுச்சேரி) தலா 8, பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) 7, ஆரணி (திருவண்ணாமலை) 6, செட்டிகுளம் (பெரம்பலூர்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), தம்மம்பட்டி (சேலம்), பண்ருட்டி (கடலூர்) தலா 6, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), கல்லந்திரி (மதுரை), திருவாலங்காடு (திருவள்ளூர்), கோடநாடு (நீலகிரி), ஆற்காடு (ராணிப்பேட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.