ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடத்தப்படும் த.வெ.கவின் இரண்டாவது மாநாடு? இன்று விஜய் அறிவிப்பு..
TVK State Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான இடத்தையும் தேர்வு செய்துள்ளனர், மேலும் இதற்கான பூமி பூஜை கடந்த மாதம் நடைபெற்றது, இந்நிலையில் இந்த மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 25 ஆகஸ்ட் 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த தேதியை தொடர்ந்து 27 ஆகஸ்ட் 2025 அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இந்த தேதியை முன்கூட்டியே தேர்வு செய்ய மதுரை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று அதாவது 5 ஆகஸ்ட் 2025 தேதி ஆன இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. முதலில் இந்த மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது.
கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு:
அதனைத் தொடர்ந்து கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து தேதியும் குறிப்பிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை 2025 ஜூலை மாதம் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடத்தப்பட்டது. அன்றைய தினமே மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: ரெட் அலர்ட் எச்சரிக்கை.. நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்..
முன்னதாக இந்த இரண்டாவது மாநில மாநாடு என்பது ஆகஸ்ட் 17, 2025 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 2025 தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த தேதியை மாற்றி அமைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
21ஆம் தேதி நடைபெறும் மாநாடு?
பின்னர் ஆகஸ்ட் 25 2025 தேதியை முடிவு செய்தனர். ஆனால் அதனை தொடர்ந்து 27 ஆகஸ்ட் 2025 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தொடர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதன் காரணமாக இந்த தேதியை மாற்றி அமைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 18, 2025 முதல் ஆகஸ்ட் 22, 2025 இந்த ஐந்து தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியை தேர்வு செய்யும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைதியான புரட்சி… காலம் உங்கள் பெயரை ஒளிரச் செய்யும் – சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
அதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதாவது 5 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று மாநாட்டிற்கான தேதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க 21 ஆகஸ்ட் 2025 அன்று கட்சி இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது