வரும் 11, 12 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?
TN CM MK Stalin Visit To Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 2025, ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.

சென்னை, ஆகஸ்ட் 5, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற ஆகஸ்ட் 12, 2025 அன்று கோவை மாவட்டத்திற்கு செல்கிறார். இதற்காக ஆகஸ்ட் 11 2025 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2025 ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக செல்ல இருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
சுமார் ஒரு வார காலம் சென்னையில் கிரீம்ஸ் ரோடு இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவர்கள் தரப்பில் அவருக்கு ஓய்வு தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுத்த பின்னர் 2025 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அரசுப் பணிகளை தொடங்கினார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உயர்நீதிமன்றம் வேதனை..
கோவை திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்:
அதனைத் தொடர்ந்து நேற்று அதாவது ஆகஸ்ட் 4 2025 தேதியான நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றிருந்தார் அங்கு வியட்நாம் கார் நிறுவனமான விண் ஃபாஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை திறந்து வைத்து அதன் முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: ராமதாஸ் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார்.. டி.எஸ்.பி அலுவலகத்தில் மனு..
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர் சுப்ரமணியன் மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார்.
கோவை மாஸ்டர் பிளான்:
இதனை தொடர்ந்து கோவைக்கு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதாவது கோவை மாஸ்டர் பிளான் 2041 திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார்.