Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாடு மேய்த்து சீமான் போராட்டம்.. வனத்துறையினருடன் தள்ளுமுள்ளு.. தேனியில் பரபரப்பு!

Seeman Protest With Cattles : தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாடு மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் தடை மீறி நடந்த போராட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது. தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாடு மேய்த்து சீமான் போராட்டம்.. வனத்துறையினருடன் தள்ளுமுள்ளு..  தேனியில் பரபரப்பு!
சீமான்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Aug 2025 17:40 PM

தேனி, ஆகஸ்ட் 03 : நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) மாடு மேய்த்து (Cattles Protest) 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். வனத்துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதோடு, கட்சி நிர்வாகிகள் தடுப்புகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியை பலப்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசயாத்திற்காக குரல் கொடுத்து வந்த சீமான், தற்போது கால்நடைகளுக்கான உரிமையை பெற்று தர முனைப்பு காட்டி வருகிறார். 2025 ஜூலை 10ஆம் தேதி ஆடு, மாடுகளுக்கான மாநாட்டை சீமான் நடத்தினார்.

 இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாடு மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதாவது, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் குரங்கனி மலைப்பாதையில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்தள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டத்தில் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று காலை 10 மணியளவில் சீமான் போராட்டம் நடத்தினார். முன்னதாக, இந்த போராட்டத்திற்கு வனத்துறையும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை.

Also Read : ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி..

மாடு மேய்த்து சீமான் போராட்டம்


இருப்பினும், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்திருந்தார். அதன்படியே, இன்று சீமான் மாடு மேய்த்து போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தில் 500 மாநாடுகள் கலந்து கொண்டனர். வனத்துறையினரின் அனுமதியை மீறி, சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி, அப்பகுதி முழுவதும் ஏராளமான வனத்துறையினரும், காவல்துறையினர் இருந்தனர். தடுப்புகளை அமைத்து ஆங்காங்கே நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால், கட்சி நிர்வாகிகள் தடுப்புகளை மீறி போராட்டம் நடத்தனர். இதனால் வனத்துறையினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Also Read : ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்.. மதுரையில் நடந்த மாநாட்டில் சீமான் பேச்சு..

இருப்பினும், சீமான் போராட்டத்தை நடத்தி முடித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை அடுத்து, அங்கு கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சீமான் உரையாற்றினார்.   அவர் பேசுகையில், “ஆடு, மாடு என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடுகள், மாடுகள் மேய்ப்பது தொழில் முறைகள் அல்ல. எங்களது வாழ்க்கை முறை. கலாச்சாரம், பண்பாடு, மாட்டுப்பொங்கல் என்று கொண்டடிய பரம்பரை நாங்கள். மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமைஎன கூறினார்.