திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சீமான்.. என்ன மேட்டர்? பரபரப்பு!
Seeman Meets CM MK Stalin : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, மு.க. முத்து மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து, ஆறுதல் கூறியிருக்கிறார்.

சென்னை, ஜூலை 20 : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை (MK Stalin) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க. முத்து மறைவுக்கு சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து சீமான் ஆறுதல் கூறி யுள்ளார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், மு.க.முத்து உடலுக்கு 2025 ஜூலை 19ஆம் தேதியான நேற்று அஞ்சலி செலுத்த முடியாததால், நேரில் வந்து 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று ஆறுதலை தெரிவித்ததாக அவர் கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க.முத்து. வயது 77. அவர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்த நிலையில், 2025 ஜூலை 19ஆம் தேதியான நேற்று காலை 8 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டார். மு.க முத்துவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள பலரும் இரங்கல் தெரிவித்தனர்.பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்பின்பு, மாலை 5 மணியளவில் மு.க. முத்துவின் உடல் பெசன்ட் நகர் மின் மயாணத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Also Read : கலைஞரின் மூத்த மகன்.. மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி




முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சீமான்
இந்த சூழலில், மு.க.முத்துவின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், “மு.க.முத்துவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். நான் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு அடக்கம் செய்யப்பட்டது.
இதனால், நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இவரது இழப்பு பெரும் துயரம். இது அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட சந்திப்பு. அரசியில், கொள்ளை, நிலைப்பாடு போன்றவை தாண்டி ஒரு உறவாக சந்தித்தேன்.
Also Read : திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? என முடிவு
அரசியல் நிலைப்பாடு போன்றை வெவ்வேறாக இருந்தாலும், பாசம் என்பது ஒன்று தான். அந்த அடிப்படையில் தான் அவரை சந்தித்தேன். நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதல்வர் ஸ்டாலின். அது எல்லாம் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட மனிதனின் அன்பு” என கூறினார்.