ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்.. மதுரையில் நடந்த மாநாட்டில் சீமான் பேச்சு..
Naam Tamilar Party Leader Seeman: ஜூலை 10, 2025 அன்று மதுரை விராதனூரில் ஆடு மாடுகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாட்டை நடத்தினார். அப்போது மேடையில் பேசிய அவர், ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கேட்பதாக தெரிவித்திருந்தார்.

மதுரை, ஜூலை 11, 2025: ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கேட்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜூலை 10 2025 தேதியான நேற்று மதுரை விராதனூரில் நடந்த ஆடு மாடு மாநாட்டில் பேசியுள்ளார். மேலும் உங்களால் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் நாங்களாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கிறோம் எங்களுக்கு ஓட்டுரிமை கொடுங்கள் என கூறியுள்ளார். மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2000 ஆடு மாடுகள் உட்பட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆடு மாடுகளுடன் மாநாடு:
வனப்பகுதி அருகே இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கான உணவு பாதிக்கப்படுவதாகவும் அவற்றை வளர்க்கும் உரிமையாளர்களையும், அது கடுமையாக பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல – சீமான்:
ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் வருமானம் என்பதை உணராத வரை ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியாது!
இன்று #ஆடு_மாடுகள்_மாநாடு
கூட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் பேச்சு.@Seeman4TN pic.twitter.com/FZqtuuEI3Y— NTK IT Wing (@_ITWingNTK) July 10, 2025
இந்த மாநாட்டில் ஆடு மாடுகளுக்கு முன்பு மேடை அமைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் வருமானம் என்பதை உணராத வரை ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியாது! கால்நடைகளை பற்றி கவலையே இல்லாத துறைக்கு பெயர் கால்நடைதுறை…! எப்படி இதெல்லாம் ஏற்றுக்கொள்கிரீர்கள்?
Also Read: மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றிக் கழகம்” என எழுதியதற்காக மானியம் மறுப்பு? – விஜய் கண்டனம்
தமிழ் நாட்டில் பாலின் சந்தை மதிப்பு மட்டும் 1 லட்சம் கோடிக்கும் மேல் ஆனால் இவர்கள் 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருமானம் பெறுகிறார்கள். எங்களின் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள் விண்ணூர்தி நிலையங்கள் கட்டிக் கொண்டார்கள் மனிதர்கள்.
Also Read: தந்தை வீட்டில் இல்லாத சமயம்.. தைலாபுரம் விரைந்த அன்புமணி.. என்ன காரணம்?
பொறம்போக்கு நிலையங்களை சில பொறம்போக்குகள் திருடிக் கொண்டதால் நாங்கள் சுவரொட்டியை தின்று சாகிறோம். ஆடு மாடுகள் பற்றி எல்லாம் பேசுகிறார்கள் என்றால் எதுவும் செய்ய முடியாது.. ஆடுகள் மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் செய்ய முடியாது!!!
ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்:
ஒரு பசுமாடு ஒரு முருங்கை மரம் இருந்தால் ஒரு குடும்பம் வறுமை சந்திக்காது என்று நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கூறுகிறார். மேலும் ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை இல்லாததால் ஓட்டுரிமை இருந்தால் மட்டுமே மதிக்கப்படுவீர்கள் என்றால் ஆடு மாடுகளுக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. நல்ல தலைவர்கள் உங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் எங்களால் தேர்ந்தெடுக்க முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்