தந்தை வீட்டில் இல்லாத சமயம்.. தைலாபுரம் விரைந்த அன்புமணி.. என்ன காரணம்?
Anbumani At Thailapuram House: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே அதிகாரப்போட்டி நீடித்து வரும் நிலையில், திண்டிவனத்தில் இருக்கும் தைலாப்புரம் இல்லத்தில் தந்தை ராமதாஸ் இல்லாத சமயத்தில், அன்புமணி அங்கு சென்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஜூலை 11, 2025: பாமக நிறுவனர் ராமதாஸ் செயற்குழு கூட்டத்திற்காக காரைக்கால் சென்றுள்ள நிலையில் அன்புமணி திண்டிவனத்தில் இருக்கக்கூடிய தைலாபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார். தந்தை வீட்டில் இல்லாத சமயத்தில் அன்புமணி தைலாபுரம் இல்லத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அன்புமணி தைலாபுரம் செல்வதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது அவர் சென்றுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே இருக்கக்கூடிய மோதல் நாளுக்கு நாள் பூதகரமாகி வரும் நிலையில் இருவரும் தனித்தனியே கட்சி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணியோ அல்லது அவரது ஆதரவாளர்களோ கலந்து கொள்வதில்லை. அதே போல் அன்புமணி தனியாக செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். பாமக கட்சி ஒன்றாக இருந்தாலும் கட்சி தலைமை தற்போது யாரிடம் என்பதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
கட்சியின் தலைவர் நான் தான் – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்:
சமீபத்தில் அன்புமணி ராமதாசை கட்சியின் நிர்வாக குழுவில் இருந்து நீக்கி புதிய நிர்வாகக் குழுவை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் கட்சி நிறுவனர் ராமதாஸ். ஆனால் அதற்கு அன்புமணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்படி அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் ராமதாஸ் இன் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் 2025 மே 28ஆம் தேதி உடன் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்ததாகவும் 2025 மே 29ஆம் தேதி முதல் கட்சியின் தலைவர் பொறுப்பு தான் வகித்து வருவதாகவும் கட்சியின் முழு செயல்பாடும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Also Read: மதிமுகவில் மீண்டும் முற்றிய மோதல்.. வைகோ சொல்லும் முக்கிய விஷயங்கள்.. என்ன நடக்கிறது?
தந்தை இல்லாத சமயம் – தைலாபுரம் சென்ற அன்புமணி:
கட்சியில் அதிகாரப் போட்டி அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நிலவி வரும் இந்த சூழலில், தந்தை ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் அன்புமணி தைலாபுரம் இல்லத்திற்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அன்புமணியின் தாயார் சரஸ்வதியை சந்திப்பதற்காக அவர் தைலாபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: மாணவர்களே அலர்ட்… நீட் தேர்வு குறித்து போலி தகவல்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
மேலும், ஜூலை 10,2025 தேதியான நேற்று எனது பெயரை பயன்படுத்தக் கூடாது வேண்டும் என்றால் இனிஷியல் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் பிற கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் பாமக பொருத்தவரையில் உட்கட்சி விவகாரமே இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இழுபறியாக இருந்து வருகிறது.