Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..

NTK Leader Seeman: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பின் கீழ் ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மாலை மதுரை விராதனூர் அருகே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jul 2025 08:40 AM

மதுரை, ஜூலை 10, 2025: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று அதாவது ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மதுரையில் ஆடு மாடுகளுடன் மாநாடு நடத்தப்படுகிறது. மதுரை விராதனுர் பகுதியில் மாலை 5 மணிக்கு இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டிற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த பத்து நாட்களாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பீக்கர் மூலம் பேசி அந்த சத்தத்திற்கு ஆடு மாடுகள் மிரளுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாநாட்டில் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஆடு மாடு மாநாடு:

இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆடு மாடுகள் வளர்ப்பு, பனை தென்னை கள் எடுப்பது என பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடு மாடுகள் உணவுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வனப்பகுதிகள் கட்டுப்பாட்டிள் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலத்தில் ஆடு மாடுகள் மேய்க்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடானது நடைபெற இருக்கிறது.

மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை:


மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பின் கீழ் ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மாலை மதுரை விராதனூர் அருகே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. மதுரை மாநகரிலிருந்து பத்து முதல் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள விராதனூரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகள் மத்தியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாடு ஆடு மாடுகள் உடன் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் அங்கு மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் இடம் பேசுவது போல் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது