Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

NTK Seeman vs TVK Vijay: லட்சிய கூட்டமா..? சினிமா ரசிகர் கூட்டமா..? போர்தான் இனி.. விஜயை மறைமுக எதிர்த்த சீமான்!

Tamil Nadu 2026 Elections: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. சமீபத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவுடன் நெருங்கிய தொடர்புடைய விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

NTK Seeman vs TVK Vijay: லட்சிய கூட்டமா..? சினிமா ரசிகர் கூட்டமா..? போர்தான் இனி.. விஜயை மறைமுக எதிர்த்த சீமான்!
தவெக விஜய் - நாதக சீமான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jul 2025 22:20 PM

சென்னை, ஜூலை 24: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை (Tamil Nadu Assembly Election 2026) எதிர்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தீவிர வியூகங்களை அமைத்து வருகின்றன. வழக்கம்போல் இரு கட்சிகளான திமுக – அதிமுக இடையில் மட்டும் இல்லாமல், இந்த முறை தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் பிரதான கட்சிகளாக களமிறங்குகின்றன. இதனால், 2026 சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திராவிட முன்னேற்ற கழகமானது விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதை எதிர்காலத்தில் தெரியவரும். நாம் தமிழர் கட்சியும் (Naam Tamilar Katchi), தமிழக வெற்றி கழகமும் (Tamilaga Vettri Kazhagam) தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைமுகமாக தவெக தலைவர் விஜயை மறைமுகமாக எதிரி என்று கூறியுள்ளார்.

விஜயை எதிரி என்றாரா சீமான்..?


சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொண்ட கொள்கைக்கும், லட்சியத்திற்கு எதிராக பெற்ற தாய், தந்தை வந்தாலும் நமக்கு எதிரிதான். இங்கு போர் இலட்சிய கூட்டத்துக்கும் ரசிகர்கள் கூட்டத்துக்கும் இடையே தொடங்கிவிட்டது. தமிழ் தேசிய இனத்தின் உரிமை, விடுதலை என்ற புனித கதவை திறப்போம். உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ள சித்தாந்தமா..? சினிமாவா..? இதற்கு இடையில்தான் சண்டை.

ALSO READ: திமுகவிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமும் இல்லை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

கொலை வெறியில் இருக்கிறேன். தம்பி எல்லா வேதனைக்கும் ஒரே மருந்துதான், அது சாதனைதான். அறிவாசன் அண்ணல் அம்பேத்கர் கூட துன்பங்களுக்கு மத்தியில்தான் சாதித்து காட்டினார். இனிமேல் பெரியம்மா மகனும் கிடையாது, சித்தாப்பாவும் கிடையாது. இனிமேல் இந்த பாவமெல்லாம் பார்க்க கூடாது. அரசியல் திடப்படையாக இருக்க வேண்டும், நெஞ்சார்ந்த நம்பிக்கைகளுக்காக ஒழுங்கற்ற உறவுகளையும் துறக்கவும் தயாராக இருக்க வேண்டும். நாம் எடுத்து வைக்கின்ற அரசியலை இந்த நாட்டில் எவனாவது எதிர்கொண்டு பார். தன்னலம் இல்லாத தூய அரசியலை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ALSO READ: பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு?.. வெளியான முக்கிய தகவல்!

சமூக நீதிக்கும், சுயமரியாதைக்கும் அடையாளமாக இருக்கும் தமிழர் அரசியலை மீட்டெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். இதன் பக்கத்தில் மக்கள் நிற்கும் வரை எந்தவிதமான சிந்தையும் குவியாது. ” என்றார்.