நடைபயணத்திற்கு தடை போட்ட டிஜிபி… நீதிமன்றத்தை நாடும் அன்புமணி!
PMK Leader Anbumani Padayatra : பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அன்புமணி நீதிமன்றத்தை நாட உள்ளார்.

சென்னை, ஜூலை 26 : பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு காவல்தறை தடை விதித்தள்ளது. கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல் கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பயணம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என ராமதாஸ் மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை அதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், நடைபயணத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அன்புமணி நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனான அன்புமணிக்கும் இன்னும் மோதல் நீடித்து வருகிறது. அன்புமணி மீது தொடர்ச்சியாக ராமதாஸ் குற்றச்சாட்டி வருகிறார். மேலும், தானே கட்சிக்கு தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். அதோடு, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
நடைபயணத்திற்கு தடை போட்ட டிஜிபி
இதற்கிடையில், தான், உரிமை மீட்க.. தலைமுறை காக்க என்ற அன்புமணியின் 100 நாள் நடைபயணத்திற்கு தடை விதிக்க கோரி, டிஜிபியிடம் ராமதாஸ் மனு அளித்திருந்தார். இந்த நடைபயணத்தால், வட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல் கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பயணம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார்.




Also Read : தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!
இந்த நிலையில், அன்புமணியின் 100 நாட்கள் நடைபயணத்திற்கு டிஜிபி தடை விதித்துள்ளார். பாதயாத்திரையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது, என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கட்சி நிறுவனர் ராமதாஸின் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி எந்த நேரத்திலும் பாதயாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட உள்ளார்.
Also Read : 10 உரிமைகளை மீட்பதே நோக்கம்.. 100 நாள் நடைப்பயணத்தை அறிவித்த அன்புமணி..
அன்புமணி நடைபயணம்
“உரிமை மீட்க… தலைமுறை காக்க’” என்ற, தமிழக மக்கள் உரிமை மீட்பு முதல் நாள் நடை பயணத்தை திருப்போரூரில் துவக்கி உரையாற்றிய போது.!#உரிமைமீட்க #தலைமுறைகாக்க pic.twitter.com/JU64rbwYvt
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 25, 2025
காவல்துறை உத்தரவுக்கு முன்பாக, அன்புமணி 2025 ஜூலை 25ஆம் தேதியான நேற்று மாலை திருப்போரூர் அருகே நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு பேசிய அன்புமணி, “ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றமே இந்த நடைபயணம். மக்களுக்கு உரிமையை தராத திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் தொடக்கமே இந்த நடைபயணம்” என கூறினார்.