அன்புமணி நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு: டாக்டர் ராமதாஸ்!
Pattali Makkal Katchi: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் வரும் ஜூலை 25 ஆம் தேதி தொடங்கும் நடைபயணம் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம், ஜூலை 24: பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், “எனது கட்சியான பாட்டாளி மக்கள் கொடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. என்னுடைய பெயரை போடக்கூடாது என ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். ஆனால் இனிஷியல் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என சொன்னேன். 2025 ஜூலை 25ஆம் தேதி முதல் அன்புமணி நடைபயணம் போவதாக சொல்லப்பட்டுள்ளது. அது குறித்து டிஜிபி இடம் நாங்கள் புகார் மனு அளித்துள்ளோம்.அன்புமணியின் நடை பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்ட முழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. காவல்துறை அந்த நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
பாமக தலைமை அலுவலகம் மாற்றம்
மேலும் சென்னையில் செயல்பட்டு வந்த பாமக தலைமை அலுவலகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இக்கட்சியின் சிறப்பு பொது குழுவின் படி பாமகவின் செயல் தலைவராக அன்புமணி தொடர்பார் என்றும் தன்னை தலைவர் என அவர் கூறிக் கொண்டால் நடவடிக்கை பாயும் எனவும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்லிக் கொள்வது தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது என குறிப்பிட்ட ராமதாஸ் கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என கூறினார். இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!




ராமதாஸ் – அன்புமணி மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த அன்புமணி கடந்த ஆண்டு அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை செயல் தலைவராக பதவி இறக்கம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனால் தான் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தொடர்ச்சியாக அன்புமணி செயல்பட்டு வருகிறார்.
அதே சமயம் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடால் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் கட்சியில் நிர்வாகிகளை இருவரும் மாறி மாறி நீக்கியும், சேர்த்தும், பதவிகளை வழங்கியும் வருகின்றனர். இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அன்புமணி ஜூலை 25ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட 100 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமும் தொகுதி வாரியாக மக்களை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தைலாபுரம் ராமதாஸ் வீட்டில் துப்பறியும் குழுவினர் சோதனை.. அறிக்கைக்கு பின் நடவடிக்கை என தகவல்..
தமிழக மக்களின் உரிமைகளை மீட்போம் என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.