Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!

PMK Internal Issues : பாமகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வரும் நிலையில், கட்சியில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ராமதாஸ் ஆதரவாளரான கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!
ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 20 Jul 2025 16:01 PM

சென்னை, ஜூலை 20 : பாட்டாளி மக்கள் கட்சியில் (PMK Internal Issues) அன்புமணி (Anbumani Ramadoss) மற்றும் ராமதாஸ் (Ramadoss) இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், இருவரும் கட்சியில் உள்ளவர்களை நீக்கியும், கட்சியில் சேர்த்தும் வருகின்றனர். இந்த சூழலில், தற்போது பாமகவில் மூன்று எம்எல்ஏக்களை கட்சி நிறுவனர் ராமதாஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு பேரும் முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழு முன், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால், கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாமகவில் பல மாதங்களாக தந்தை, மகன் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததை அடுத்து, கட்சியில் பிரச்சை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி விஷயத்திலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

Also Read : ஆட்சி அதிகாரத்தில் பங்கு – எங்கள் உரிமை .. பாமக 37 ஆம் ஆண்டு விழாவில் அன்புமணி திட்டவட்டம்..

பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

தொடர்ந்து, ராமதாஸ் அன்புமணி மீது பகிரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும், கட்சியில் தானே தலைவர், நிறுவனர் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். மேலும், இருவரும் தனித்தனியாக கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியில் இருந்து நீக்குவது, அன்புமணிக்கு ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பாமகவில் மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை ராமதாஸ் ஆதரவாளரான கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் அன்புமணி போராட்டத்தில் 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று ஈடுபட்டுள்ளார்.

Also Read : பிரச்சனை முடிவுக்கு வரும்.. பாமக மாநாட்டில் அன்புமணி இருப்பார் – ராமதாஸ் விளக்கம்..

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்த்தில் அன்புமணி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இப்படியாக இருவரும் கட்சிக்குள் தனித்தனியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.