10 உரிமைகளை மீட்பதே நோக்கம்.. 100 நாள் நடைப்பயணத்தை அறிவித்த அன்புமணி..
Anbumani 100 Days March Program: தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பத்து நோக்கத்துடன் 100 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்த நடைபயணம் 2025 ஜூலை 25ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாள் அன்று தொடங்கப்படும்.

அன்புமணி ராமதாஸ்: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நடைபயணமானது வருகின்ற 2025 ஜூலை 25ஆம் தேதி அதாவது கட்சி நிறுவனரான ராமதாஸ் பிறந்த நாளன்று தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தரப்பில் மக்கள் சந்திப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பாமக உட்கட்சி விவகாரம்:
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ஆம் தேதி தொடக்கம்: முதல் கட்ட பயண விவரம்! pic.twitter.com/2HbrHmNNFf
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 22, 2025
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சி விவகாரம் இன்னும் தீராத நிலையில் உள்ளது. ஆட்சி அதிகாரம், தலைமைப் பொறுப்பு யாருக்கு என்ற மோதல் தந்தை மகன் இடையே தொடர்ந்து வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.




மேலும் படிக்க: தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!
கடந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கட்சி நிறுவனர் ராமதாஸ் பொருத்தவரை கூட்டணி என்றால் அது அதிமுக அல்லது திமுகவுடன் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணி செயல்பாடுகள் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்தே உள்ளது.
100 நாள் நடைப்பயண திட்டம்:
இப்படி இருக்க கூடிய சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பத்து நோக்கத்துடன் 100 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் 2025 ஜூலை 25ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாசன் பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணமானது தமிழ்நாடு தினமான நவம்பர் ஒன்றாம் தேதி முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாள் சென்னையில் இருக்கக்கூடிய திருப்போரூரில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கப்படுகிறது.
10 உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கம்:
10 நோக்கங்களை முன்வைத்து இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதில்
- முக்கியமாக சமூக நீதிக்கான உரிமை
- வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை
- வேலைக்கான உரிமை
- விவசாய மற்றும் உணவுக்கான உரிமை
- வளர்ச்சிக்கான உரிமை
- நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை
- கல்வி நல்வாழ்வுக்கான உரிமை
- மது போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை
- நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை
- ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதன் என்பன தான் இந்த பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது