பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு?.. வெளியான முக்கிய தகவல்!
O Panneerselvam Meets PM Narendra Modi | இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதிய நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை 15 : இரண்டு நாடகள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை (Indian Prime Minister Narendra Modi) சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க நேரம் தரும்படி, பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமரை சந்திக்கு ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். ஜூலை 26, 2025 மாலை பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக்கொள்ள உள்ளார். அன்றைய தினம் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு சில நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே அவர் டெல்லிக்கு புறப்படுகிறார்.
பிரதமரை சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம்
பிரதமரின் தமிழக வருகை குறித்த தகவல் வெளியானதை அடுத்து, தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்பதற்கோ அல்லது வழி அனுப்பவோ அனுமதி அளித்தால் அதை பாக்கியமாக கருதுவேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ’சந்திக்க அனுமதி வேணும்’ தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு – வெளியான தகவல்
இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.