’சந்திக்க அனுமதி வேணும்’ தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
O. Paneerselvam Letter To PM Modi : தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்பதற்கோ அல்லது வழி அனுப்பவோ அனுமதி தந்தால் அது பாக்கியமாக கருதுவேன் என தனது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை 24 : பிரதமர் மோடிக்கு (PM Modi Tamil Nadu Visit) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை (PM Modi) சந்திக்க அனுமதி கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O. Paneerselvam) கடிதம் எழுதி இருக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்பதற்கோ அல்லது வழி அனுப்பவோ அனுமதி தந்தால் அது பாக்கியமாக கருதுவேன் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி, 2025 ஜூலை 26ஆம் தேதி தமிகத்திற்கு வருகை தர உள்ளார். தூத்துக்குடிக்கு 2025 ஜூலை 26ஆம் தேதி மாலை பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அங்கு வரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 27ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இதனை அடுத்து, அன்றைய தினமே, டெல்லிக்கு புறப்படுகிறார்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “முதலில், மதுரை-போடிநாயக்கனூர் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதைக்காக உங்கள் தொலைநோக்குத் தலைமைக்கும் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றியதற்கும் தனிப்பட்ட முறையிலும் எனது தொகுதி மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read : கூட்டணியில் சலசலப்பு.. பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி? பின்னணி என்ன?




தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலைய முனையம், விரிவாக்கப்பட்ட ஓடுபாதை மற்றும் எனது தொகுதியில் மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் உள்ளிட்ட பல முக்கிய ரயில் திட்டங்களைத் திறந்து வைக்க, மதிப்பிற்குரிய தாங்கள் ஜூலை 26, 2025 அன்று வருகை தர உள்ளதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், நிலையான முதலீடு மற்றும் தொலைநோக்குத் திட்டமிடல் மூலம் பிராந்திய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் உங்கள் துடிப்பான தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதியான உறுதிப்பாட்டை இந்த மைல்கல் முன்னேற்றங்கள் பிரதிபலிக்கின்றன.
Also Read : தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியம். உங்கள் அன்பான பாராட்டு மிகவும் மதிக்கப்படும், நன்றியுடன் நினைவுகூரப்படும்” என குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. எனவே, பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பாரா இல்லையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.