’கூட்டணி ஆட்சி தான்.. அமைச்சரவையிலும் பங்கு’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!
TTV Dhinakaran On AIADMK BJP Alliance : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக பாஜக கூட்டணிக்குள் மேலும் சலசலப்புகள் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி ஆட்சியே இல்லை எனவும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை 23 : அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளம் அமைச்சரவையில் இடம்பெறும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக பாஜக கூட்டணிக்குள் மேலும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சிக்கு மறுத்து வரும் நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறு கூறியிருக்கிறார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் தற்போது சலசலப்புகள் இருந்து வருகிறது. அமித் ஷா கூட்டணி ஆட்சி தான் கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி ஆட்சி இல்லை எனவும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, அதிமுக தலைமை தங்கள் கூட்டணிக்குள் தவெக, நாதக போன்ற கட்சிகளை இழுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டணி ஆட்சிக்கு மறுத்து வருகிறார். இதனால், அதிமுக பாஜக கூட்டணி சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இப்படியான சூழலில், அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி குறித்து பேசிய கருத்து புயலை கிளப்பி இருக்கிறது. சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், “2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்.
Also Read : த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. த.வெ.க சொன்ன பதில்..




”கூட்டணி ஆட்சி தான்”
கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும். திமுகவை வீழ்த்தி கூட்டணி ஆட்சி அமைப்போம். இதனை தமிழக மக்கள் விரும்புவார்கள். 2014,2019ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இருந்தாலும், கூட்டணி கட்சிகளை சேர்த்து அமைச்சரவையில் இடம் கொடுத்தார்கள்.
Also Read : திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.
அதுதான் தமிழகத்திற்கும். தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான். அமித் ஷா அவர்களும் அதைத் தான் சொல்லுகிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித் ஷா அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜா குறித்து பேசிய டிடிவி தினகரன், ”அன்வர் ராஜா எனது நெருங்கிய நண்பர். அவர் திமுகவுக்கு மாறியது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.