Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.

TVK Party Meeting: சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதர் அர்ஜுனா, திமுகவின் ஊழல் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருகிறது என பேசியுள்ளார்.

திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜுனா
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jul 2025 07:40 AM

த.வெ.க கொள்கை விளக்க கூட்டம்: திமுகவின் ஊழல் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருகிறது என தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம், நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து விவரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கொள்கை விளக்க கூட்டம் நேற்று அதாவது ஜூலை 21 2025 தேதியான நேற்று நடைபெற்றது.

திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை தமிழகத்தில் வளர்த்து வருகிறது:

சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதர் அர்ஜுனா கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “ பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை அதனால்தான் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரியார் அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது. இன்று இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொள்கை என்ற ஒன்று கிடையாது. வெறும் ஊழல் மட்டும் தான். திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை தமிழகத்தில் வளர்த்து வருகிறது.

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் பார்வை கொண்ட ஒரே தலைவர் விஜய் தான்:


எம்ஜிஆர் உடைய கொள்கை அந்தக் கொள்கையோடு அதிமுகவை மீட்டெடுத்த ஜெயலலிதா இந்த இரண்டு தலைவர்களின் பார்வையை கொண்ட ஒரே தலைவர் விஜய் தான். அதிமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்து கொண்டார் விஜய். ஒரு சாமானிய மனிதனாக பங்கெடுத்தார். எங்கள் ஒற்றை நோக்கம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்றால் அதிமுகவில் இருக்கக்கூடிய தொண்டர்கள் அனைவரும் என்றைக்கோ த.வெ.கவில் இணைந்து விட்டனர். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது” என பேசி உள்ளார்