Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்.. திட்டத்தில் மாற்றம்..

Edappadi Palanisamy Campaign Program: எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 7, 2025 அன்று தொடங்கியது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 21, 2025 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதாவது ஜூலை 24, 2025 தேதியான இன்று இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்.. திட்டத்தில் மாற்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jul 2025 06:30 AM

எடப்பாடி பழனிசாமி: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகள் மக்களை சந்தித்து பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 7 2025 அன்று தொடங்கியது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 21, 2025 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதாவது ஜூலை 24, 2025 தேதியான இன்று இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொகுதி வாரியாக மக்களை சந்தித்து உரையாற்றுகிறார். முதல் கட்ட சுற்று பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இன்று தொடங்கும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்:

அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். முதல் நாளான 2025 ஜூலை 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 25 ஜூலை 2025 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளுக்கு செல்கிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் என்பது 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. என்ன காரணம்:


ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு 2025 ஜூலை 26 ஆம் தேதி மேற்கொள்ள இருந்த பிரச்சார பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சுற்றுப்பயணம் என்பது ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ எடப்பாடி பழனிசாமி 2025 ஆகஸ்ட் 8 வரை தொடர் பிரச்சாரம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த. சுற்றுப்பயணத் திட்டத்தில் 26 ஜூலை 2025 அன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற 29 ஜூலை 2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சூறாவளி சுற்ற பயணம் மேற்கொள்ள உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி 33 தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.